பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.எம்.ஏ., அழைப்பின்படி தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்தம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 650 தனியார் மருத்துவமனைகள், டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர்.இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் ராஜா கூறியதாவது: ஆயுர்வேத, சித்தா, யுனானி பிரிவுகளில் மருத்துவம் படித்தவர்கள், அலோபதி மருத்துவ அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள, மத்திய இந்திய மருத்துவ குழுமம் அறிவித்துள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி, போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 650 தனியார் மருத்துவமனைகள், டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர்.


இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் ராஜா கூறியதாவது: ஆயுர்வேத, சித்தா, யுனானி பிரிவுகளில் மருத்துவம் படித்தவர்கள், அலோபதி மருத்துவ அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள, மத்திய இந்திய மருத்துவ குழுமம் அறிவித்துள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி, போராட்டம் நடத்துகிறோம். இன்று (நேற்று) தனியார் மருத்துவமனை டாக்டர்கள், அவர்களுடன் இணைந்தவர்கள் காலை முதல் மாலை வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில், தமிழகத்தில் ஒரு லட்சம் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், இந்தியா முழுவதும், ஏழு லட்சம் தனியார் மருத்து வமனை டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், பரிசோதனை மையங்கள், எக்ஸ்-ரே, ஸ்கேன் சென்டர்கள், பயிற்சி டாக்டர்கள் போன்றோரும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். எங்களுக்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள, 18 ஆயிரம் அரசு டாக்டர்களும் கறுப்பு பட்டை அணிந்து பணி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஈரோடு மாவட்டத்தில், 650 தனியார் மருத்துவமனை, ஸ்கேன் சென்டர் உள்ளிட்டவை வேலை நிறுத்தம் செய்தன.


* அந்தியூரில், ஐ.எம்.ஏ., அந்தியூர் கிளை சார்பில், தலைவர் ஞானவேல் தலைமையில், அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மருத்துவமனை முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்கள் கைகளில் பதாகை ஏந்தி கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X