சென்னை : மாநிலம் முழுவதும், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மற்றும் பல்வேறு சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

தமிழக - கேரளா எல்லையில், பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி உள்ளது. சரக்கு வாகனங்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்படும். இந்த சோதனை சாவடியில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

லஞ்ச ஒழிப்பு ரெய்டு
இந்நிலையில், அதிகாலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கணேசன் தலைமையில், ஐந்து போலீசார் மாற்று வாகனத்தில் வந்து போலீசார் ரெய்டு நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 50,200 ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது. கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த போலீசார், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில் குமாரிடம், கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர். காலை, 4:00 மணிக்கு துவங்கிய ரெய்டு, ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நடக்கிறது.
கோவை, பொள்ளாச்சி, வேலூர், காட்பாடி, சேலம் உள்ளிட்ட பல்வேறு சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்ற பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. 3 லட்சத்திற்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.நீலகிரி மாவட்ட தொரப்பள்ளி சோதனை சாவடியில், இன்று காலை, 6:00 மணியளவில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சுகாசினி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, தலைமையில், எஸ்.ஐ.,க்கள் ரங்கநாதன், சாதன பிரியா உள்ளிட்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் வராத, 34,700 ரூபாய் பறிமுதல் செய்ததுடன், சில ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் ஆர்டிஓ அலுவலத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.25 லட்சம், 100 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அலுவலகத்தில் இருந்த நகைகள் லஞ்சமாக பெற்றதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இது போல் தேனி மாவட்டத்திலும் கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '
01. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நாயை காரில் கட்டி இழுத்து சென்ற 62 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். தெருவில் தொந்திரவு செய்ததாக அவர் இவ்வாறு கட்டி ஊருக்கு வெளியே கொண்டு செல்ல இழுத்து சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
02. கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள ஐ போன் நிறுவனத்தில் ஊதியம் வழங்காததால் ஆத்திரமுற்ற பணியாளர்கள் நிறுவன கட்டத்தை சூறையாடினர்.
தமிழக நிகழ்வு
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.10 கோடி மதிப்பு உள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன . இருவரிடம் விசாரணை நடக்கிறது.
காஞ்சிபுரம் சிறு காவேரிபாக்கத்தில் கணவன் கதிர்வேல் மனைவி மணிமேகலை இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்தனர். இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் வீட்டில் கொள்ளை
தென்காசி மாவட்டம் ஊர்மேனி அழகியான் புரத்தில் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளி பால்தினகரன் (30), இவரை பிடிக்க சென்ற காவலர் சக்திவேலை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினார்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண் போலீஸ் பத்மா என்பவரது வீட்டில் 22 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. மதிப்பு ரூ. 5 லட்சம்.
உலக நடப்பு
அமெரிக்காவின் நியூயார்க்கில் கறுப்பர் மற்றும் அகதிகள் நலம் தொடர்பான பிரச்னைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் மீது கார் மோதியதில் பலர் காயமுற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE