சேலம்: சேலம் வழியே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொச்சுவேலி - மைசூரு விழாக்கால சிறப்பு ரயில், நேற்று முதல், வரும், 31 வரை, தினமும் மாலை, 4:45 மணிக்கு, கொச்சுவேலியிலிருந்து கிளம்பி, கோவை, சேலம் வழியே, அடுத்தநாள் காலை, 11:20க்கு மைசூருவை அடையும். மறுமார்க்கத்தில், இன்று முதல், ஜன., 1 வரை, தினமும் மதியம், 12:50க்கு மைசூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை, 9:20க்கு கொச்சுவேலியை அடையும். திருநெல்வேலி-பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரயில், டிச., 13, 20, 27ல், அதிகாலை, 1:15 மணிக்கு, நெல்லையில் இருந்து கிளம்பி, கோவை, சேலம் வழியே, அடுத்தநாள் இரவு, 9:35க்கு பிலாஸ்பூரை அடையும். மறுமார்க்கத்தில், டிச., 15, 22, 29ல், இரவு, 8:15க்கு கிளம்பி, மூன்றாம் நாள் அதிகாலை, 3.15 மணிக்கு, நெல்லையை அடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்தினர் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE