ஓமலூர்: சேலத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்து, 300 பேர் விலகினர். அவர்கள், தி.மு.க.,வில் இணையும் விழா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜூ தலைமையில், ஓமலூரில், நேற்று முன்தினம் நடந்தது. அதில், சேலம் மத்திய மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் முன்னிலையில், 300 பேரும், தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு, வரும் சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் வெற்றிபெற தீவிரமாக உழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை, எம்.எல்.ஏ., வழங்கினார். இதில், ஓமலூர் ஒன்றிய செயலர்கள் செல்வகுமரன்(தெற்கு), ரமேஷ்(கிழக்கு), பாலசுப்ரமணி(வடக்கு), காடையாம்பட்டி பொறுப்பாளர் அறிவழகன், மாணவரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE