பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி தண்ணீர் திறப்பு: ஓடை சேதம்; பயிர்கள் நாசம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
ஆத்தூர்: பொதுப்பணித்துறை அனுமதியின்றி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஓடை சேதம் அடைந்து வெளியேறியதால், 50 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில், சாகுபடி செய்துள்ள பயிர்கள் மூழ்கின.ஆத்தூர், கல்வராயன்மலை அடிவாரம் உள்ள, முட்டல் ஏரி மூலம், சுற்றுவட்டாரத்தில் உள்ள, 300 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள், பாசன வசதி பெறுகின்றன. அந்த ஏரியில் இருந்து, கல்லாநத்தம் ஏரிக்கு தண்ணீர் செல்ல,

ஆத்தூர்: பொதுப்பணித்துறை அனுமதியின்றி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஓடை சேதம் அடைந்து வெளியேறியதால், 50 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில், சாகுபடி செய்துள்ள பயிர்கள் மூழ்கின.


ஆத்தூர், கல்வராயன்மலை அடிவாரம் உள்ள, முட்டல் ஏரி மூலம், சுற்றுவட்டாரத்தில் உள்ள, 300 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள், பாசன வசதி பெறுகின்றன. அந்த ஏரியில் இருந்து, கல்லாநத்தம் ஏரிக்கு தண்ணீர் செல்ல, புதிதாக நீரோடை அமைக்கப்பட்டது. அதில், தண்ணீர் திறப்பது தொடர்பாக, அம்மம்பாளையம், கல்லாநத்தம் மக்கள் இடையே பிரச்னை எழுந்தது. இதுதொடர்பாக, கடந்த மாதம், ஆர்.டி.ஓ., துரை தலைமையில் நடந்த பேச்சில், அரசு அனுமதி பெற்று, ஓடையில் தண்ணீர் திறக்கப்படும் என, பொதுப்பணித்துறையினர் உறுதியளித்தனர். இந்நிலையில், அந்த ஓடையில் நேற்று முன்தினம் இரவு, சிலர் தண்ணீர் திறந்துவிட்டனர். இதனால், முயல்கரட்டில், ஓடையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்களுக்குள் வெள்ளம்போல் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக, 50 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில், சாகுபடி செய்துள்ள மரவள்ளி, நெல், பருத்தி, மக்காசோளம், காய்கறி பயிர்கள் மூழ்கின. பாதிக்கப்பட்ட விவசாயிகள், நேற்று, ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மனு அளித்தனர். ஆனால், தண்ணீர் வடியாததோடு, பயிர்கள் சேதம் அடைந்ததால், விவசாயிகள், கவலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X