ஏற்காடு: ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் உள்ள, அரசு வணிக வளாக கடையில், டாஸ்மாக் கடை திறக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்காடு ஒன்றியத்தில், ஏற்கனவே, 3 மதுக்கடைகள் உள்ள நிலையில், சுற்றுலா பயணியர், மக்கள் அதிகளவில் வரும் பஸ் ஸ்டாண்டில், ஒரு கடை திறக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஏற்காடு நல கூட்டியக்கத்தினர், சவால் அறக்கட்டளையினர், தி.மு.க., - த.மா.கா.,வினர், தனித்தனியாக, ஏற்காடு பி.டி.ஓ.,விடம், பஸ் ஸ்டாண்டில் மதுக்கடை திறக்கக்கூடாது என, வலியுறுத்தி, மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE