சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை மீட்க கோரி ஸ்டேஷன் வளாகத்தில் உறவினர்கள் தர்ணா

Added : டிச 12, 2020
Share
Advertisement
அரூர்: கடத்தி செல்லப்பட்ட சிறுமியை மீட்டுத் தரக்கோரி, அவரது உறவினர்கள், அரூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடியை சேர்ந்த, 17 வயது சிறுமி கடந்த, 24ல், இரவு, 10:00 மணிக்கு வீட்டில் இருந்து காணவில்லை. சிறுமியின் தந்தை, அரூர் போலீசில் புகாளித்தார். தொடர்ந்து, 16 நாட்களுக்கு மேலாகியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை.

அரூர்: கடத்தி செல்லப்பட்ட சிறுமியை மீட்டுத் தரக்கோரி, அவரது உறவினர்கள், அரூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடியை சேர்ந்த, 17 வயது சிறுமி கடந்த, 24ல், இரவு, 10:00 மணிக்கு வீட்டில் இருந்து காணவில்லை. சிறுமியின் தந்தை, அரூர் போலீசில் புகாளித்தார். தொடர்ந்து, 16 நாட்களுக்கு மேலாகியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை, 10:45 மணிக்கு அரூர் ஸ்டேஷன் வந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் அங்குள்ள வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: சிறுமியை அதே பகுதியை சேர்ந்த, 19 வயது வாலிபர் கடத்தி சென்றுள்ளார். வாலிபரின் குடும்பத்தினரிடம், பெயரளவிற்கு மட்டும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கடத்தி செல்லப்பட்டு, 16 நாட்களுக்கு மேலாகியும் அவர் எங்கு இருக்கிறார் என, தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். சிறுமியை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து, 11:10 மணிக்கு உறவினர்கள் தர்ணாவை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X