ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, உனிசெட்டி மலை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டைட்டன் நிறுவனத்தின், சமூக பொருளாதார மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒரு கோடியே, 52 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. டைட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது: மிகவும் குறைவான இடத்தில், சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. டைட்டன் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமேஷன் சார்பில், கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, வெளி நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவு, ஊசி போடும் அறை, தடுப்பூசி சேமிப்பு அறை, ஆய்வகம், கர்ப்பிணி சோதனை பிரிவு அறைகள் உள்ளன. அரசு சார்பில் இரண்டு, டைட்டன் நிறுவனம் மூலம், 10 படுக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார். டைட்டன் பொது மேலாளர்கள் விவேகானந்தன், சி.எஸ்.ஆர்., திட்ட இயக்குனர் சங்கர், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE