சேலம்: 'ஆயுஷ்' மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி, தமிழக பல் மருத்துவர் சங்கம் சார்பில், நேற்று, வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், 6,000 பல் மருத்துவமனைகள் மூடப்பட்டன.
இதுகுறித்து, தமிழக பல் மருத்துவர் சங்க, மாநில செயலர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அலோபதி மருத்துவர்கள், உலக அளவில் நன்மதிப்பை கொண்டவர்களாக உள்ளனர். பல நாடுகளில் இருந்து, நம் நாட்டுக்கு அறுவை சிகிச்சைக்கு ஏராளமானோர் வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 19ல் வெளியான அரசிதழில், 'ஆயுஷ்' மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என அறிவிப்பு வெளியானது. ஆயுர்வேதத்தில் மயக்க மருந்துகள் இல்லாத நிலையில், அவர்கள் அறுவை சிகிச்சை செய்யும்போது, தேவையற்ற குழப்பங்கள் உருவாகும். மருத்துவ முறை கலப்பால், நம் பாரம்பரிய முறைகளான சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்டவையும் அழியும் சூழல் உருவாகலாம். உலக அளவில், நம் மருத்துவத்துக்கு தடைவிதிக்கவும் வாய்ப்புள்ளது. அதனால், இந்த உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி, தமிழக பல் மருத்துவர் சங்கம் சார்பில், இன்று(நேற்று) காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை, வேலைநிறுத்தம் செய்யப்பட்டது. இதில், தமிழகம் முழுதும் உள்ள, 6,000 பல் மருத்துவமனைகள் பங்கேற்றன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE