கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சி.பி.சி.ஐ.டி.,விசாரணை அறிக்கை தாமதம்: இலங்கை போலீஸ்காரருக்கு ஜாமின்

Added : டிச 12, 2020
Share
Advertisement
ராமநாதபுரம்: 60 நாட்களுக்குள் ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணை அதிகாரி இறுதி அறிக்கை தாக்கல் செய்யாததால் இலங்கை போலீஸ்காரர் சமீந்தா பிரதீப்குமாரா பண்டாராவுக்கு 30, ஜாமின் வழங்கி குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவிட்டது.இலங்கை போலீஸ்காரர் சமீந்தா பிரதீப்குமாரா பண்டாரா 30. இவர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி கள்ளப்படகில் தனுஷ்கோடி வந்தபோது செப்.,6ல் மண்டபம்

ராமநாதபுரம்: 60 நாட்களுக்குள் ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணை அதிகாரி இறுதி அறிக்கை தாக்கல் செய்யாததால் இலங்கை போலீஸ்காரர் சமீந்தா பிரதீப்குமாரா பண்டாராவுக்கு 30, ஜாமின் வழங்கி குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவிட்டது.
இலங்கை போலீஸ்காரர் சமீந்தா பிரதீப்குமாரா பண்டாரா 30. இவர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி கள்ளப்படகில் தனுஷ்கோடி வந்தபோது செப்.,6ல் மண்டபம் மரைன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் 23 கிலோ போதைப்பொருள் கடத்தி பதுக்கிய வழக்கில் அவர் இலங்கை போலீசாரால் தேடப்படுவது தெரியவந்தது. வழக்கு ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.இலங்கை போலீஸ்காரர் சார்பில் ஜாமின் கேட்டு ராமநாதபுரம் 2வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டு 95 நாட்கள் ஆன நிலையில் வழக்கு விசாரணை அதிகாரி 60 நாட்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டிய குற்றவியல் நடுவர் மன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதன்படி ரூ.20 ஆயிரம், இரு நபர் உத்தரவாதத்துடன் அகதிகள் முகாமில் முகாம் அதிகாரி முன்னிலையில் தினமும் காலை 10:00, மாலை 5:00 மணிக்கு கையெழுத்திட உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X