பொது செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்:கூட்டமைப்பு வலியுறுத்தல்

Added : டிச 12, 2020
Share
Advertisement
மதுரை:தமிழ்நாடு அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சந்ரு, பூபதி, சிவஞானம் தெரிவித்துள்ளதாவது:தமிழகத்தில் மத்திய அரசு கட்டாய கல்வி சட்டம் 2010 ஆக.,23ல் அமல்படுத்தி பின் 2012 நவ.,16 வரை நியமனம் பெற்ற ஆசிரியர்களில், அரசு மற்றும் சிறுபான்மை பள்ளிகளுக்கு டி.இ.டி., கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டது.அதேநேரம் அரசு உதவிபெறும்

மதுரை:தமிழ்நாடு அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சந்ரு, பூபதி, சிவஞானம் தெரிவித்துள்ளதாவது:தமிழகத்தில் மத்திய அரசு கட்டாய கல்வி சட்டம் 2010 ஆக.,23ல் அமல்படுத்தி பின் 2012 நவ.,16 வரை நியமனம் பெற்ற ஆசிரியர்களில், அரசு மற்றும் சிறுபான்மை பள்ளிகளுக்கு டி.இ.டி., கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டது.அதேநேரம் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் குறித்து தெரிவிக்கவில்லை. இதனால் 2010 ஆக.,23 முதல் 2012 நவ.,16 க்கு முன் 1700 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இவர்களுக்கும் டி.இ.டி., கட்டாயம் என தாமதமாக அறிவிக்கப்பட்டது.பழைய நடைமுறையில் நியமிக்கப்பட்ட அரசு, சிறுபான்மை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகை போல் பத்து ஆண்டுகளாக பணியாற்றும் 1700 ஆசிரியர்களுக்கும் புத்தாக்க பயிற்சி அளித்து டி.இ.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X