சிவகாசிகோடை காலம் வந்தாலே இயற்கையாக கிடைக்கும் இளநீர் , நுங்கு, பதநீர் போன்றவற்றை மக்கள் தேடி வாங்கி ருசிப்பர். செயற்கை முறையில் தயாரிக்கப்படும் குளிர் பானங்களை விட இயற்கையாக கிடைக்கும் இவற்றிற்கு என்றுமே மவுசு அதிகம்தான். தமிழ்நாட்டின் தேசிய மரமான பனை மரம் பதனீர், நுங்கு சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை அதிகம் தருகிறது.பதனீர் காய்ச்சப்பட்டு கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி, பனங்கற்கண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. பனங்காய்கள் முற்றி மரத்தில் பழுக்கும்போது பனம்பழம் ஆகிறது. இதுவும் ஒரு சிறந்த உணவு பொருளாக உள்ளது. இதே போல் பனம் பழத்தின் விதையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப் பொருளான தவுண் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. இவைகள் மனிதனின் வயிற்று புண்ணுக்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. மருத்துவ குணமிக்க தவுண் குளிர்ச்சியுடன் உடல் சூட்டை தணிக்கிறது. மலச்சிக்கலுக்கும் தீர்வாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தவுண் சிவகாசி தேரடி முக்கில் விற்பனை செய்யப்படுகிறது. இதனோடு பனங்கிழங்கும் கிடைக்கிறது.
பனை மரத்தில் கிடைக்கும் தவுண் முக்கிய உணவாகும். இது நவம்பர், டிசம்பர், ஜனவரி மட்டுமே கிடைக்கும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். அன்றைய காலத்தில் உணவாகப் பயன்பட்ட தவுண் பற்றி தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.பாண்டியம்மாள், ஸ்ரீவில்லிபுத்துார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE