சாத்தூர் :விளையாட்டு திடலில் கற்கள் குவியல், சகதியாக மாறிய ரோடு , சுகாதாரக்கேட்டில் ஓடை என சாத்தூர் அண்ணாநகர் மக்கள் பாதிக்கின்றனர்.இந்நகரில் குடியிருப்புகள் , தீப்பெட்டி தொழிற்சாலைகள், அட்டை கம்பெனிகள் வியாபார நிறுவனங்கள் அதிக அளவில் செயல்படுகிறது. இங்குள்ள சாத்தூர் தாயில்பட்டி ரோட்டில் இருந்து பெரியார் நகர் செல்லும் ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் பாதாளசாக்கடை பணிகள் குடிநீர் திட்டத்திற்காக ரோடு தோண்டபட்டதால் மண் ரோடு ஆக மாறி மழையில் சகதியாக மாறி விடுகிறது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வலுக்கி விழுகின்றனர் . முதியவர்கள் நடமாட முடியாமல் தவிக்கின்றனர். ஓடைகளில் குடியிருப்பு வாசிகள் குப்பை கொட்டுவதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அண்ணாநகர் நடுவில் செல்லும் ஓடையை மாஸ் கிளீனிங் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்கள் விளையாட்டு திடலில் கட்டுமான பணிக்கான கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் விளையாட முடியாத நிலை உள்ளது. இவற்றை அகற்ற வேண்டும்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE