வோரா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி| Dinamalar

வோரா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி

Added : டிச 12, 2020
Share
புதுடில்லி:அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி 'லோக்பால்' விசாரிக்க வேண்டும் என்ற வோரா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு கிரிமினல்களுடன் உள்ள



புதுடில்லி:அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி 'லோக்பால்' விசாரிக்க வேண்டும் என்ற வோரா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு கிரிமினல்களுடன் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு செய்ய 1993ல் முன்னாள் உள்துறை செயலர் எம்.என். வோரா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி லோக்பால் விசாரிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. அதனால் வோரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் தினேஷ் மகேஸ்வரி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் கூறியதாவது:வெறும் கற்பனையின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற கற்பனைகளை புத்தகமாக எழுதலாம். மனுவாக தாக்கல் செய்யக் கூடாது.இந்த மனுவை மனுதாரர் வாபஸ் பெற வேண்டும். வேண்டுமானால் சட்ட கமிஷனிடம் இந்த மனுவை தாக்கல் செய்யலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்.இதையடுத்து மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X