கரூர்: வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் துவங்கியுள்ளன. வங்கி அலுவலர் பணிக்கான, முதனிலை தேர்வு வரும், 31 மற்றும் ஜனவரி மாதம், 2,4,5 ல் நடக்கிறது. அதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, இணையவழி மூலம் பயிற்சி கரூர் மாவட்ட, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. அதில் இலவசமாக பாட குறிப்புகள், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. 'இந்த பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 93605-57145, 04324-223555 ஆகிய மொபைல் மற்றும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, தங்களுடைய, 'வாட்ஸ் ஆப்' மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை, பதிவு செய்து கொள்ளலாம்' என, கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE