பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுவினர் சிறப்பு கூட்டம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை யூனியன் அலுவலகத்தில் நபார்டு வங்கி சார்பில் மகளிர் குழுவினரின் சிறப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ராஜேஷ் தலைமை வகித்தார். கரூர் நபார்டு வங்கி, உதவி பொது மேலாளர் பரமேஷ்குமார் பேசுகையில், ''மாவட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள கடன் இலக்கின் படி, மகளிர் குழுவினருக்கு தொழில் கடன், நேரடி கடன், தாட்கோ திட்ட கடன், விவசாய கடன் உட்பட

குளித்தலை: குளித்தலை யூனியன் அலுவலகத்தில் நபார்டு வங்கி சார்பில் மகளிர் குழுவினரின் சிறப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ராஜேஷ் தலைமை வகித்தார். கரூர் நபார்டு வங்கி, உதவி பொது மேலாளர் பரமேஷ்குமார் பேசுகையில், ''மாவட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள கடன் இலக்கின் படி, மகளிர் குழுவினருக்கு தொழில் கடன், நேரடி கடன், தாட்கோ திட்ட கடன், விவசாய கடன் உட்பட சிறப்பு கடன்களை தகுதியான குழுவினருக்கு பொது துறை வங்கிகள் வழங்க வேண்டும்,'' என்றார். முன்னதாக, சிநேகிதி அறக்கட்டளை சார்பில், ராஜேந்திரம் கிராமத்தில் செயல்படும் மகளிர் குழுவினர் பங்கேற்று, வங்கிகள் மூலம் பெற்ற கடன்கள், அதன் மூலம் அடைந்த சமூக பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து பேசினர். மேலும், வங்கியாளர்கள், மகளிர் குழுவினரிடம் கலந்துரையாடல் நடந்தது. தொடர்ந்து, குளித்தலை வட்டார வங்கியாளர்கள் கூட்டம் தனியே நடந்தது. இதில், ஏ.பி.டி.ஓ., ராணி மற்றும் பொது துறை வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X