பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் வடிகால் வசதி உருவாக்குமா அரசு ?

Added : டிச 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சமீபத்தில் பெய்த கனமழையினால், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் பிரார்த்தனா அவின்யூ முதல் தெரு, இரண்டாவது தெரு, செல்வாநகர் விரிவு ஆகிய பகுதிகளின் சாலை முழுவதும் குண்டும், குழிமாக காட்சி அளிக்கிறது.அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயங்களுடன் செல்கிற அவலை நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அனைவரும்
 மழைநீர் வடிகால் வசதி உருவாக்குமா அரசு ?

சமீபத்தில் பெய்த கனமழையினால், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் பிரார்த்தனா அவின்யூ முதல் தெரு, இரண்டாவது தெரு, செல்வாநகர் விரிவு ஆகிய பகுதிகளின் சாலை முழுவதும் குண்டும், குழிமாக காட்சி அளிக்கிறது.
அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயங்களுடன் செல்கிற அவலை நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அனைவரும் கையெழுத்திட்ட புகார் மனு,ஒன்றை சோழிங்கநல்லுார் 15வது மண்டலம் உதவி கமிஷனரிடம் வழங்கினர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில், பல ஆண்டுகளாக, மழைக்காலங்களில், மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். மழைக்காலம், முடிந்தாலும், மழைநீர் வடிய ஒரு மாதத்திற்கு மேலாகிறது. புதிய வடிகால் கால்வாய் அமைத்தும், பிரார்த்தனா அவின்யூ முதல்தெரு சந்திப்பில் தரமான சாலை அமைத்து தர வேண்டும்.
பிரார்த்தனா அவின்யூ இரண்டாவது தெரு சாலை இரண்டு அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ளது. இதனால், எங்களால் இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியவில்லை அதனால், காங்கிரீட் ஸ்லாப் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-டிச-202013:05:52 IST Report Abuse
Bhaskaran Kadantha பெரு மழைவெள்ளத்தின்போது மக்கள் அவதிகளை பார்த்தும் அடிப்படை வசதிகளைக்கூட செய்துதராத அரசும் அதிகாரிகளும் இருந்தென்ன போயென்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X