தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக பின்புறம், இணை சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மனோகரன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை முதல், இரவு, 9:30 மணி வரை சோதனை நடத்தினர். எழுத்தர்கள் இருவர், எழுத்தர்களின் உதவியாளர்கள் இருவர் என நால்வரிடம், 79 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அலுவலர்கள், ஊழியர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்காக, பத்திரப்பதிவு செய்தவர்களிடம் பெறப்பட்ட பணம் என தெரிந்தது. இணை சார் - பதிவாளர் இளையராஜா மற்றும் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE