பொது செய்தி

தமிழ்நாடு

நூல் விலை உயர்வு; உற்பத்தி பாதிப்பு

Added : டிச 12, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இதில் அதிகளவு லுங்கி உற்பத்தி செய்யப்படுகிறது. நூல் விலை உயர்வால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, பள்ளிபாளையம் வட்டார ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: கொரோனா பிரச்னையால், தொய்வு நிலையில் இருந்த விசைத்தறி தொழில், கடந்த சில

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இதில் அதிகளவு லுங்கி உற்பத்தி செய்யப்படுகிறது. நூல் விலை உயர்வால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, பள்ளிபாளையம் வட்டார ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் கூறியதாவது: கொரோனா பிரச்னையால், தொய்வு நிலையில் இருந்த விசைத்தறி தொழில், கடந்த சில மாதங்களாக இயல்பு நிலைக்கு திரும்பியது. தீபாவளி சமயத்தில் விற்பனையும், உற்பத்தியும், ஆர்டரும் சீராக இருந்தது. இந்நிலையில், லுங்கி உற்பத்திக்கு பயன்படுத்தும் பாலியஸ்டர் நூல் விலை, கிலோவுக்கு, 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இன்னும் 5, 10 ரூபாய் என அதிகரித்து வருகிறது. இதனால், உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை விலை உயர்த்தி விற்பனை செய்ய வேணடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், வியாபாரிகள் கொள்முதல் செய்ய தயாராக இல்லை. முந்தைய விலைக்கு விற்பனை செய்தால், நஷ்டம் தான் ஏற்படும். இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் தேக்கமடைந்துள்ளன. நூல் விலை குறைந்தால் மட்டுமே, புதிய ஆர்டர் எடுக்க முடியும். உற்பத்தி தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. துணிகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளதால், தற்போது, 50 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் விசைத்தறி தொழில் முழுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X