தர்மபுரி: தர்மபுரியில், பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, 25 பவுன் நகை பறித்த, வேன் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, சக்தி நகரை சேர்ந்த, 16 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். மாணவியின் தோழி ஒருவர் மூலம், பாலக்கோடு எம்.செட்டிஹள்ளியை சேர்ந்த மினிவேன் டிரைவர் லெனின், 20, என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தொழில் துவங்க பணம் வேண்டும் என, லெனின் கேட்டுள்ளார். மாணவி தன் வீட்டில் இருந்த, 25 பவுன் நகையை எடுத்து லெனினிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து பழகிய லெனின், ஒரு கட்டத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில், வீட்டில் நகை காணாமல் குறித்து, மாணவியிடம் பெற்றோர் கேட்டபோது, அவர் தாயிடம் விபரத்தை கூறியுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார், தர்மபுரி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, வேன் டிரைவர் லெனினை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, அவரிடமிருந்த மொபைல்போனை பறிமுதல் செய்தனர். அந்த போனில், இளம்பெண்களின் புகைப்படம், ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் வேறு சிறுமியர் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE