தமிழ்நாடு

மேட்டூர் அணையில் தேங்கியுள்ள ரசாயன கழிவால் அதிர்ச்சி: தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் தேங்கும், துர்நாற்றம் வீசும் ரசாயன கழிவின் பரப்பளவு, ஆண்டுதோறும் அதிகரிப்பதால், கரையோர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தேங்கியுள்ள கழிவால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சத்துக்குள்ளாகி ள்ளனர்.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., அணை நிரம்பினால், 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் தேங்கும், துர்நாற்றம் வீசும் ரசாயன கழிவின் பரப்பளவு, ஆண்டுதோறும் அதிகரிப்பதால், கரையோர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தேங்கியுள்ள கழிவால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சத்துக்குள்ளாகி ள்ளனர்.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., அணை நிரம்பினால், 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கும். 10 ஆண்டாக நீர்மட்டம், 80 அடிக்கு மேல் இருக்கும்போது, பச்சை, நீல நிறத்தில் எண்ணெய் படலம் போன்ற ரசாயன கழிவு, அணை கரையோர நீர்பரப்பு பகுதியில் தேங்குகிறது. இதனால் எழும் துர்நாற்றம், பல கி.மீ., வரை உள்ளதால், கரையோர மக்கள் உணவு கூட சாப்பிட முடியாமல் அவதிப்பட்டனர். கடந்த ஆண்டு டிசம்பரில், ரசாயன கழிவால் துர்நாற்றம் வீசியதால், அதை அழிக்க, சேலம் மாவட்ட நிர்வாகம், முதல்முறையாக முடிவு செய்தது. தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில், பாசி படலத்தை எதிர்வினை புரிந்து அழிப்பதோடு, துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் திறனூட்டப்பட்ட, 'பேசிலஸ் சப்டெய்லிங்' எனும் நுண்ணுயிரி, பாசி படலம் மீது தெளிக்கப்பட்டது. பின், நாற்றம் குறைந்து, ரசாயன கழிவு படிப்படியாக அழிந்தது. நடப்பாண்டு, மீண்டும் அதே போல், ரசாயன கழிவு உற்பத்தியாகி, கடந்த ஆண்டை விட கூடுதலாக கரையோர நீர்பரப்பு பகுதி, அணை, 16 கண் மதகு பகுதியில், தற்போது தேங்கியுள்ளது. இதன் மூலம் நோய் கிருமி பரவி தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.


கடந்த ஆண்டை போல், நடப்பாண்டும், 'பேசிலஸ் சப்டெய்லிங்' நுண்ணியிரியை, பொதுப்பணித்துறை கொள்முதல் செய்து, ரசாயன கழிவு மீது தெளித்து, அழிக்கும் பணியை சில நாளாக மேற்கொண்டுள்ளது. சேலம், மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் ரகுநாதன் குழுவினர், நேற்று, மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் தேங்கியுள்ள பாசிபடலங்களை சோதனைக்கு சேகரித்தனர். ஆனால், ஆண்டுதோறும் அணை நீர்பரப்பு பகுதியில், ரசாயன கழிவு தேங்கும் பரப்பளவு அதிகரித்து வருவதால், கரையோர மக்கள், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மாசு கட்டுப்பாடு வாரிய, சேலம் மாவட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''அணை நீர்பரப்பு பகுதியில், பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், ரசாயன உரத்தை பயன்படுத்துகின்றனர். அதிலுள்ள நைட்ரஜன், பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயனங்கள், செடி, கொடிகளுடன் கலந்து மக்கி நீரில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அந்த கழிவை கட்டுப்படுத்த, விவசாயிகள், ரசாயன உரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

காத்திருக்கும் ஆபத்து: கடந்த, 10 ஆண்டாக, மேட்டூர் அணையில் தேங்கும் ரசாயன கழிவு அளவு ஆண்டுதோறும் அதிகரிக்க, விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன உரங்கள்தான் காரணமா, வேறு காரணம் உள்ளதா என்பதை, மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும். இல்லையெனில், வரும் ஆண்டுகளில் அணையில் தேங்கும் ரசாயன கழிவு அளவு, மேலும் அதிகரிப்பதோடு, அதை அழிக்க, அரசு தனியாக நிதி ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். அது மட்டுமின்றி, அணை நீரும் மாசடைந்து, ஒரு கட்டத்தில் குடிநீருக்கே உபயோகிக்க முடியாத நிலையும் ஏற்படலாம். ஆபத்து வரும் முன் விழித்து கொள்ளவேண்டியது அரசின் கடமை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X