பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாத்த... தலைவா... ரஜினி : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : டிச 13, 2020 | Added : டிச 12, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை : அரசியலை நோக்கி பயணித்துள்ள நடிகர் ரஜனிகாந்த், தனது 70வது பிறந்தநாளை இன்று(டிச., 12) கொண்டாடுகிறார். இதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதால் சமூகவலைதளங்களில் அவர், அண்ணாத்த, தலைவா உள்ளிட்ட பல பெயர்களில் டிரெண்ட் ஆனார்.இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த். 1950, டிச., 12ம் தேதி பிறந்த நடிகர் ரஜினிகாந்த், சினிமாவில் வருவதற்கு முன் ஆபீஸ்
HappyBirthdayRajinikanth, Thalaiva, Annathe, ரஜினிகாந்த், #Rajinikanth,

சென்னை : அரசியலை நோக்கி பயணித்துள்ள நடிகர் ரஜனிகாந்த், தனது 70வது பிறந்தநாளை இன்று(டிச., 12) கொண்டாடுகிறார். இதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதால் சமூகவலைதளங்களில் அவர், அண்ணாத்த, தலைவா உள்ளிட்ட பல பெயர்களில் டிரெண்ட் ஆனார்.

இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த். 1950, டிச., 12ம் தேதி பிறந்த நடிகர் ரஜினிகாந்த், சினிமாவில் வருவதற்கு முன் ஆபீஸ் பியூனாக, கண்டக்டராகப் பணிபுரிந்திருக்கின்றார். அவருக்குள் இருந்த சினிமா ஆசை, கே.பாலசந்தரின் "அபூர்வ ராகங்கள்" படம் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தது. சிவாஜி ராவ் என்ற இவரது இயற்பெயர் ரஜினிகாந்த் என மாறியதும் இப்படத்திலிருந்து தான். அதன்பின் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி இன்று மிகப்பெரிய உயரத்தில் அமர்ந்துள்ளார்.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக, சூப்பர் ஸ்டாராக, எல்லோராலும் தலைவவாக கொண்டாடப்படும் ரஜினி, அடுத்ததாக அரசியலை நோக்கி பயணித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் இவரும் களமிறங்குகிறார். ரஜினி ரசிகர்கள் நீண்டநாள் காத்திருப்பு நிறைவேற உள்ளது. அதனால் இன்று ரஜினியின் 70வது பிறந்தநாளை ரசிகர்கள் அமர்க்களமாக கொண்டாடி வருகின்றனர்.


latest tamil news




பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் என அரசியல் தலைவர்கள் தொடங்கி, திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஜினியின் அரசியல் வருகையொட்டி பல பெயர்கள், தலைப்புகளில் வாழ்த்து போஸ்டர் அடித்துள்ளனர். அதோடு, அவரை காண காலை முதலே அவரின் வீட்டருகே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க சமூகவலைதளத்தில் ரஜினி சத்தம் தான் அதிகம் ஒலிக்கிறது. பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அவரின் அரசியல் வருகையை சுட்டிக்காட்டி ரஜினி கூறிய மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் நாளைய தமிழகமே என கூறி தமிழக வரைபடத்தில் ரஜினியின் போட்டோவை பதித்து கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்து சொல்லியும், அரசியலில் சாதிக்கவும் வாழ்த்தி வருகின்றனர்.

சிரஞ்சீவி, ராகவா லாரன்ஸ் போன்ற திரைநட்சத்திரங்கள் சினிமாவில் ஜெயித்தது போன்று அரசியலிலும் ஜெயிக்க வேண்டி அவரை வாழ்த்தி உள்ளனர். இதனால் சமூகவலைதளங்களில் ரஜினி பிறந்தநாள் தொடர்பாக #HappyBirthdayRajinikanth, #Thalaiva, #Annathe, #ரஜினிகாந்த், #Rajinikanth, #HBDSuperstarRajinikanth, #HappyBirthdaySuperstarRajinikanth, #HappyBirthdayRajinikanth போன்ற பல ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeba - khobar,சவுதி அரேபியா
13-டிச-202014:20:37 IST Report Abuse
jeba விவசாயிகள் போராட்டத்தை பற்றி அதிகம் பகிரவும்
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
13-டிச-202011:43:06 IST Report Abuse
Vijay போதும் உங்க ரஜினி புராணம். இந்த தேர்தலோடு இவர் காலி
Rate this:
Cancel
Kumar - Chennai,இந்தியா
13-டிச-202010:54:28 IST Report Abuse
Kumar உதயநிதியை ஏன் சினிமாவில் நடிக்கிறீர்கள் அரசியலிலும் 'நடிக்கிறீர்கள்' என யாரும் கேக்க மாட்டார்கள்.. கலைஞர் கூட கடைசி வரை கதை வசனம் எழுதி வந்தார் மாமல்லபுரத்தில் தங்கி.. ஆனா ரஜினி என்றதும் ஆ ஊ என கதறுவது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X