வாஷிங்டன்: வரும் ஜனவரி 20-ஆம் தேதி புதிய அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு ஆயத்தமாகிவரும் நிலையில் டிரம்ப் இறுதியாக தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.
ஆனால் இன்னும் டிரம்பின் வலதுசாரி ஆதரவாளர்கள் டிரம்ப் திட்டமிட்டு முக்கிய மாகாணங்களில் தோற்கடிக்கப்பட்டதாக கூறி பேரணிகள் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் 10 ஆயிரம் டிரம்ப் ஆதரவாளர்கள் சாலையில் பேரணி நடத்தி தங்கள் தலைவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அங்கலாய்த்தனர்.

பிளாக் லைப் மேட்டர்ஸ் கருப்பின அமைப்பினரும் அவ்வப்போது தலைநகர் வாஷிங்டன் டிசியில் டிரம்புக்கு எதிராகப் பேரணி நடத்துவது வழக்கம். டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் கருப்பின அமைப்புகளுக்கும் அடிக்கடி பேரணியின்போது மோதல் ஏற்படுவது வழக்கம். சில சமயங்களில் இது வன்முறையாக மாறி போலீசார் தடியடிவரை செல்லும்.வாஷிங்டனில் முக்கிய பகுதிகளாகிய நேஷனல் மால், ப்ரீடம் பிளாசா உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது இந்த மோதல் போக்கு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அங்கு செல்லவேண்டாம் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE