வானவில்ல புழிஞ்சு சாயம் போட்ட கைத்தறி சேலைகள்!

Added : டிச 12, 2020
Share
Advertisement
சிங்குச்சா... சிங்குச்சா...செகப்பு கலரு சிங்குச்சா பச்சை கலரு சிங்குச்சா மஞ்சள் கலரு சிங்குச்சா வண்ண வண்ண சேலைக வசதியான சேலைக வானவில்ல புழிஞ்சு வந்து சாயம் போட்ட சேலைக கூடு தாவி ஓடும் எங்க உள்ளம் ஓடும் சேலைக உறுதியான சேலைக உடுத்துவாங்க ஏழைங்க...மனதில் ஆழமாக பதிந்த எத்தனையோ பாடல்களில், பொற்காலம் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் வரிகள் மறக்க முடியாதவை. இந்த பாடல் சேலையின்
வானவில்ல புழிஞ்சு சாயம் போட்ட கைத்தறி சேலைகள்!

சிங்குச்சா... சிங்குச்சா...செகப்பு கலரு சிங்குச்சா பச்சை கலரு சிங்குச்சா மஞ்சள் கலரு சிங்குச்சா வண்ண வண்ண சேலைக வசதியான சேலைக வானவில்ல புழிஞ்சு வந்து சாயம் போட்ட சேலைக கூடு தாவி ஓடும் எங்க உள்ளம் ஓடும் சேலைக உறுதியான சேலைக உடுத்துவாங்க ஏழைங்க...மனதில் ஆழமாக பதிந்த எத்தனையோ பாடல்களில், பொற்காலம் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் வரிகள் மறக்க முடியாதவை.
இந்த பாடல் சேலையின் பெருமையை உணர்த்தியது. இப்படியான சேலையை, கைத்தறி நெசவாளர்கள் கொரோனா காலத்தில் நெசவு செய்யாமல் நிறுத்தி இருந்தனர். எட்டு மாதங்களுக்கு பின், தற்போது நெசவாளர் வீடுகளில் 'தறி' சத்தம் கேட்கத்துவங்கியுள்ளது. பாரம்பரிய கைத்தறி நெசவை கைவிட்டு, வேறு தொழிலுக்கு சென்றவர்கள் தற்போது, தறியில் அமர்ந்ததால், வீடுதோறும் 'தடக்... தடக்' என, தறிச் சப்தம் கேட்க துவங்கியுள்ளது.
பொள்ளாச்சி, நெகமம், ஜலத்துார், குள்ளக்காபாளையம், குஞ்சிபாளையம் பகுதியில், கைத்தறி காட்டன் சேலைகளுடன், கைத்தறி பட்டு உற்பத்தியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இடையிடையே கோராபட்டு நெசவும் நடக்கிறது.ஒவ்வொரு குடும்பத்தினரும், வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று சேலைகள் நெசவு செய்து முடிக்கின்றனர். கைத்தறி பட்டு சேலைகள் ஆந்திராவுக்கு அதிகமாக அனுப்பப்பட்டது. அதேபோன்று, கேரள மாநிலத்துக்கும், கோவைக்கும் அனுப்பப்பட்டது.
இங்கு உற்பத்தியாகும் சேலைகள், 400 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. கைத்தறி பட்டு நெசவு பிரதானமாக உள்ளதால், வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. நான்காயிரத்தில் துவங்கி, 7,500 ரூபாய் வரை பட்டு ரகங்கள் விற்பனைக்கு தயாராகி வருகிறது. குறிப்பாக, சாப்ட் சில்க், புட்டா, ஆல் சில்க் ரக பட்டுகள் அதிகம் விற்பனையாகின்றன.
நடப்பு ஆண்டில் ஓணம், தீபாவளி காலங்களில், விற்பனை மந்தமாக இருந்தது. வரும் பொங்கல் திருநாளிலாவது விற்பனை சூடு பிடிக்கும் என, கைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பாரம்பரியம், கலாசாரத்தை வலியுறுத்தும் நிலையில், வேட்டி, சேலை அணிவதை கடை பிடித்து, கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிப்போம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X