கம்பம்: முதன்முதலாக காய்கறி பயிர்களுக்கு காப்பீடு செய்யும் திட்டத்தை தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
காய்கறிப் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் இல்லாத நிலை இருந்தது. தற்போது அவற்றுக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு கத்தரிக்கு ரூ. 21 ஆயிரத்து 750, முட்டைக்கோஸ்க்கு ரூ. 22 ஆயிரத்து 400, தக்காளிக்கு ரூ. 20 ஆயிரத்து 500, கொத்தமல்லிக்கு 11 ஆயிரத்து 600, வாழைக்கு ரூ. 61 ஆயிரத்து 900 காப்பீட்டு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் காப்பீட்டு தொகையில் 5 சதவீதத்தை பிரிமீயமாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி பாஸ்புக்கின் முன்பக்கம் போன்றவற்றை கொடுத்து இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். நோய் தாக்குதல், சூறைக்காற்று, பலத்தமழை உள்ளிட்டவற்றால் பாதிப்பு ஏற்படும் போது தப்பித்துக் கொள்ளலாம் என உத்தமபாளையம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டியன் ராணா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE