சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'நானும் ஜெயிலுக்கு போறேன்!'

Added : டிச 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
'நானும் ஜெயிலுக்கு போறேன்!'டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூர் குமரன் சிலை முன், தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அனுமதி இல்லாததால், ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினரை, போலீசார் கைது செய்து, தனியார் பஸ்களில் அழைத்து சென்றனர். அப்போது, திருப்பூர் மத்திய மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செல்வராஜ் உட்பட சில நிர்வாகிகள்,
பக்க வாத்தியம்


'நானும் ஜெயிலுக்கு போறேன்!'



டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூர் குமரன் சிலை முன், தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அனுமதி இல்லாததால், ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினரை, போலீசார் கைது செய்து, தனியார் பஸ்களில் அழைத்து சென்றனர். அப்போது, திருப்பூர் மத்திய மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செல்வராஜ் உட்பட சில நிர்வாகிகள், 'எங்களுக்கும் இதே பஸ் தானா... போலீஸ் வாகனம் இல்லையா?' எனக் கேட்டனர். 'அதெல்லாம் ஏதும் கிடையாது' என, போலீசார் தெரிவித்தனர். அதனால், அதே பஸ்சில் ஏறி, படியில் நின்றபடி சென்றார்.இதைப் பார்த்த முதியவர் ஒருவர், 'நானும் ஜெயிலுக்கு போறேன், பாத்துக்குங்கன்னு, வடிவேல் மாதிரி காமெடி பண்றாங்களே...' என்றதும், வேடிக்கை பார்த்தோர் சிரித்தனர்.


'திகாரையே பார்த்தவங்க!'



கோவை போத்தனுார் - செட்டிபாளையம் சாலையில், மாநகராட்சி கழிவு நீர் பண்ணை வளாகத்திலுள்ள குப்பைக் கிடங்கை பார்வையிட, தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி திட்டமிட்டிருந்தார்.ஆனால், நுழைவுவாயில் பூட்டப்பட்டு, 'தடைசெய்யப்பட்ட வீதி' என, மாநகராட்சி சார்பில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.கோவை வெள்ளலுாரில், கனிமொழி பேசுகையில், 'இங்குள்ள குப்பைக் கிடங்கை பார்வையிட வருகிறேன் என்றதும், அவசரமாக, 'தடை செய்யப்பட்ட பகுதி' என, அறிவிப்பு வைத்துள்ளனர். தி.மு.க.,வினரை பேச விடாமல் தடுப்பது, வழக்கு போடுவது தான், இங்கு வேலையாக உள்ளது. நீங்கள் எத்தனை வழக்கு போட்டாலும், எங்களுக்கு பயமில்லை; எதிர்கொள்வோம்' என்றார். அங்கிருந்த இளம் நிருபர், 'அதாவது, நாங்க திகார் சிறையையே பார்த்தவங்கன்னு சொல்லுறாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.


தேர்தலுக்கு பின் எளிமை இருக்குமா?



கடலுார் மாவட்டம், சிதம்பரம் பகுதியில், மழை பாதிப்புகளை, முதல்வர் இ.பி.எஸ்., சமீபத்தில் ஆய்வு செய்ய சென்றார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள, கீரப்பாளையம் ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜெயபாலன், கட்சி நிர்வாகிகளுடன், தன் வீட்டு வாசல் முன், முதல்வருக்கு வரவேற்பு அளிக்க நின்றிருந்தார்.முதல்வர் இ.பி.எஸ்., வீராணம் ஏரிக்குச் செல்லும் வழியில், ஜெயபாலன் வீட்டின் முன் காரை நிறுத்தி, அவரிடம் நலம் விசாரித்தார். இதனால் ஜெயபாலன், மகிழ்ச்சி அடைந்தார்.அங்கிருந்த, அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'முதல்வர் ரொம்ப எளிமையாக இருக்காரு...' என, நெகிழ்ச்சியுடன் கூறினார்.அருகிலிருந்த நபர், 'தேர்தல் முடிஞ்சதும், இந்த எளிமை இருக்குமா...' எனக் கேட்கவும், தொண்டர் யோசிக்கத் துவங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
13-டிச-202019:20:40 IST Report Abuse
Anantharaman Srinivasan தேர்தல் ஜுரத்தினால் மக்கள் பார்த்து நக்கல் அடிக்கம் படியான செயல்கள்..
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-டிச-202006:07:17 IST Report Abuse
D.Ambujavalli தேர்தல் நாடகம் ஆரம்பித்தாலே கிழவியை நலம் விசாரித்து, ஊனமுற்றவருக்கு உதவி செய்து டிவியில் விளம்பரம் தேட வேண்டாமா? அத்தனையும் ஓட்டுக்கான முதலீடு சாமீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X