சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

என்னைய்யா உங்க நியாயம்?

Added : டிச 12, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
என்னைய்யா உங்க நியாயம்?ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: தினமும், சமஸ்கிருத செய்தித் தொகுப்பை, தமிழின், 'பொதிகை டிவி' மற்றும் பிற மாநில மொழி, 'டிவி'யிலும் ஒளிபரப்ப வேண்டும் என, துார்தர்ஷன் அதிகாரிகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது, மொழி ஆதிக்கத்தின் ஒளி -- ஒலி வடிவமாகும் என, ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.மேலும், 'செய்தி அறிக்கைகளிலும்,


என்னைய்யா உங்க நியாயம்?ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: தினமும், சமஸ்கிருத செய்தித் தொகுப்பை, தமிழின், 'பொதிகை டிவி' மற்றும் பிற மாநில மொழி, 'டிவி'யிலும் ஒளிபரப்ப வேண்டும் என, துார்தர்ஷன் அதிகாரிகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது, மொழி ஆதிக்கத்தின் ஒளி -- ஒலி வடிவமாகும் என, ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.மேலும், 'செய்தி அறிக்கைகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும், ஹிந்தி திணிக்கப்பட்டபோது, 'டிவி' பெட்டிகளை உடைத்து, தி.மு.க., எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியது' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.எனக்கு, 84 வயது. தி.மு.க.,வினர், 'டிவி' பெட்டிகளை உடைத்ததாக, எந்த நினைவும் இல்லை. ஜி.டி.நாயுடு தயாரித்த ரேடியோவிற்கு, அப்போது மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 'லைெசன்ஸ்' கொடுக்கவில்லை. இதனால் அவர், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, தான் தயாரித்த ரேடியோக்களை உடைத்தார். இதற்கும், ஹிந்தி எதிர்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.சரி விஷயத்திற்கு வருவோம்... 'டிவி' சமஸ்கிருத செய்தி வாசிப்பு, மத்திய அரசின் ஆணவ, அதிகார மமதையைத் தான் காட்டுகிறது என, ஸ்டாலின் கூறுகிறார்
.தி.மு.க.,வின், 'கலைஞர் டிவி'யில், 'ராமானுஜர்' தொடர் ஒளிபரப்பப்படுகிறதே... அதில் இடம்பெறும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள், சமஸ்கிருத ஸ்லோகங்களை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்; அதற்கு தமிழில் விளக்கமும் தருகின்றனர்.இந்த தொடருக்கு, கருணாநிதி தான் வசனம் எழுதினார். அவருக்கு தான் ஹிந்தியும் தெரியாது; சமஸ்கிருதமும் தெரியாது. அவ்வாறு இருக்க, அவர் எப்படி ராமானுஜர் தொடருக்கு எழுத முடிந்தது.சமஸ்கிருத ஸ்லோகங்களை, எளிதில் படித்து, விளக்கம் கூற முடியாது. அதில் புலமை பெற்றிருந்தால் மட்டுமே, விளக்கம் தர முடியும். ஒருவேளை கருணாநிதி, சமஸ்கிருத பண்டிதரிடம் விளக்கம் கேட்டு, அந்த தொடரை எழுதியிருந்தார் என்றால், அவர் மட்டும் தெரிந்து கொள்ளலாம்; மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாதா?

என்னைய்யா உங்க நியாயம்?


பா.ம.க.,வை தடை செய்யணும்!டாக்டர் ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தேர்தல் நெருங்கும் காலத்தில் தான், பா.ம.க.,வுக்கு, ஜாதி மீது அக்கறை வரும். வன்னியருக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, சமீபத்தில், பா.ம.க., நடத்திய போராட்டத்தில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி, தங்கள் நிஜ முகத்தை காட்டினர். இந்த செயலால் மக்கள் அச்சமடைந்தனர்.பா.ம.க., ஒரு வன்முறை கட்சி என, மறுபடியும் நிரூபணமாகி உள்ளது. 20 சதவீத ஒதுக்கீடு என, போராட்டம் நடத்துவதெல்லாம், வரும் தேர்தலில் கூட்டணி கட்சியிடம் அதிக, 'சீட்' பெறுவதற்காகத் தான். தன் சுயநலத்திற்காக, அப்பாவி பாட்டாளிகளை பலிகடாவாக
ஆக்கியுள்ளார், ராமதாஸ்.விபரம் தெரியாமல், ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய, பா.ம.க.,வினர், 3,000 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. அவர்களுக்கு, இந்திய ரயில்வே சட்டம், 1989 பிரிவு - 150ன்படி, 10 ஆண்டுகள் சிறை முதல், சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படலாம்; அவர்களுக்கு, அரசு வேலை கிடைக்காது.இவ்வழக்கு, எளிதில் தள்ளுபடி செய்யப்படாது. ஏனெனில் ரயில்வே துறை, மத்திய அரசின் வசம் உள்ளது.

ரயில் மீது கல் வீசியோர், கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள், அதன் விளைவு தெரிந்து, அவ்வாறு செயல்பட்டனர். போராட்டத்தை துாண்டியோரையும், சிறையில் அடைக்க வேண்டும்.கடந்த, 1982ல், எம்.ஜி.ஆர்., ஆட்சியில் இருந்தபோது, ராமதாஸ் துாண்டுதலின்படி, பெரும் போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன.பாலம், சாலை என, கண்ணில் பட்ட அனைத்தையும் சேதப்படுத்தினர்; தலித் வீடுகளை தீ வைத்து எரித்தனர்.அந்த வன்முறை போராட்டத்தால், 3,000 கோடி ரூபாய் அளவிற்கு, பொது சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டன.அதன் பின், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 'போராட்டத்தால், பொதுசொத்துக்கு ஏற்படும் இழப்பின் தொகையை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியிடம் வசூலிக்கப்படும்' என, கடுமையான சட்டம் இயற்றினார்.அந்த சட்டம், இன்றும் நடைமுறையில் உள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., கூட்டணி கணக்கு போடாமல், பா.ம.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகம், அமைதிப்பூங்காவாக திகழ, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் ஆணையம், வன்முறை கட்சியான, பா.ம.க.,வை உடனே தடை செய்ய வேண்டும்.
காமராஜரை ஏன் மறந்தார்?சொ.முத்துக்குமரன், சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ரஜினி, அரசியலுக்கு வருவது உறுதியாகி உள்ளது.தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., முன்னாள் பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோர் இருக்கும் வரை, அரசியலுக்கு வருவதற்கு தயங்கினார். அதை, அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.அவர்களின் ஆட்சியில், 'சிஸ்டம்' கெட்டுப் போகவில்லையா? தமிழகத்தில் அவர்கள் பொற்கால ஆட்சியை நடத்தினரா?இப்போது, எம்.ஜி.ஆர்., ஆட்சியை அமைக்கப் போவதாக, அவர் கூறுகிறார். அதைத் தான் ஜெயலலிதா நடத்தினார். இவருக்கு பின், இ.பி.எஸ்., நடத்திக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ரஜினி எதற்கு?ரஜினி மறந்தும், 'காமராஜர் ஆட்சியை அமைப்பேன்' என, கூறவில்லை. காமராஜரின் சாதனை, நேர்மை, ஆட்சி நடத்தும் திறமை ஆகியவற்றை தன்னால் தர முடியாது என்பதை, அவர் உணர்ந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் பெய ரைச் சொன்னால் ஓட்டு கிடைக்கும்; காமராஜரின் பெயரைச் சொன்னால், ஓட்டு கிடைக்காது என்பது தான், ரஜினியின் பதிலாக இருக்க முடியும்.ரஜினி, அரசியலை நன்றாக புரிந்து கொண்டுள்ளார் என்பது மட்டும் நன்கு தெரிகிறது.


அரசியல்வாதிகள் வருந்தவில்லை!டாக்டர் எம்.செல்வராஜ், மதுரையிலிருந்து எழுதுகிறார்: ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யாமல், கவர்னர் காலம் தாழ்த்துவது, அவரது தனிப்பட்ட முடிவாக இருக்க முடியாது. நாட்டின் நலனுக்காக, சில ரகசியங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உண்டு.'கொலையாளிகளை விடுதலை செய்தால், நாட்டிற்கே பேராபத்து ஏற்படும்' என்பதும், முக்கிய காரணமாக இருக்கலாம்.முன்னாள் பிரதமர் ராஜிவ் மட்டுமின்றி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர், அந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியாயினர். அவை, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள்.எனவே, ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தால், நம் நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலையும்.மேலும், கொலையாளிகள் பேரறிவாளன் உட்பட எவரும், தாங்கள் செய்த செயலுக்காக வருந்தவில்லை; மன்னிப்பு கோரவில்லை.இவர்களை விடுதலை செய்தால், மீண்டும் பயங்கரவாத செயலில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு, என்ன உத்தரவாதம் உள்ளது?இந்த கொடும்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும் என, சிலர் குரல் கொடுப்பது, அரசியல் காரணத்திற்காக மட்டுமே.ராஜிவ் மற்றும் அவருடன் சேர்ந்து கொல்லப்பட்ட நபர்களுக்காக, இந்த அரசியல்வாதிகள் கொஞ்சமும் வருந்தவில்லை; மாறாக, கொலையாளிகளை காப்பாற்ற வேண்டும் என, போராடுகின்றனர்.


அவர்களுக்கு எதுக்கு சம்பளம்?க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: 'கொரோனா' நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட நிதிச்சுமையை குறைக்க, எம்.பி.,க்களின் சம்பளத்தில், 30 சதவீதம் பிடித்தம் செய்ய, பார்லிமென்ட் உறுப்பினர் அனைவரும் ஆதரவளித்துள்ளனர். அவர்களை பாராட்டுவோம்.அப்படியே, எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தையும் கணிசமாக குறைத்து, நிதி பற்றாக்குறையை சரி செய்யலாம்.நம் நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளில், 99 சதவீதம் பேர், ஊதியத்தை நம்பி இல்லை. அவர்களுக்கு வருமானம் வரும் வழியே வேறு என்பது, அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு சம்பளமே தேவையில்லை.லால்பகதுார் சாஸ்திரி அமைச்சராக இருந்த போது, 'என் குடும்ப செலவிற்கு, மாதத்திற்கு எவ்வளவு தேவையோ, அதை மட்டும் சம்பளமாக கொடுத்தால் போதும்' எனக் கூறி, 50 ரூபாய் மட்டும் பெற்று வந்தார்.அந்த பணத்தில், தன் மனைவியிடம் சிக்கனமாக குடும்பம் நடத்தச் சொன்னார். ஒருநாள், சாஸ்திரியின் நண்பர் ஒருவர் அவசரமாக, 50 ரூபாய் வேண்டுமென்று கேட்டார். 'நான் குடும்ப செலவுக்கேற்ற மாதிரி, சம்பளம் பெறுகிறேன். அதனால் பணம் இல்லையே...' என, சாஸ்திரி வருத்தத்துடன் கூறினார். அப்போது, அங்கு வந்த அவர் மனைவி, 'அவருக்கு என்ன கஷ்டமோ, நான் தருகிறேன்' எனச் சொல்லி, சேமித்து வைத்திருந்த, 50 ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.நண்பர் சென்றவுடன், சாஸ்திரி, தன் மனைவியை அழைத்து, 'எப்படி இந்தப் பணம் சேமிப்பாயிற்று?' எனக் கேட்க, 'நீங்கள் கொடுக்கும் பணத்தில், மாதம், 10 ரூபாயை சேமிக்கிறேன்' என்றார்.மறுநாள் அலுவலகம் சென்ற சாஸ்திரி, 'இம்மாதத்திலிருந்து, என் சம்பளத்தில், 10 ரூபாய் குறைத்து கொடுங்கள். நாங்கள் குடும்பம் நடத்த, அதுவே போதுமானது' எனக் கூறி, அதற்கான உத்தரவும் போட்டு வாங்கி கொண்டாராம்.அப்படிப்பட்ட தியாகிகள் வாழ்ந்த பூமி, நம் நாடு என்பதில் பெருமை கொள்வோம். மக்கள் பிரதிநிதிகள் தாமாக முன் வந்து, தங்கள் ஊதியத்தை, இந்நாட்டிற்காக அளிக்க வேண்டும்.


நுனிப்புல் மேய வந்தனரா?வி.மோகன், நெல்லிக்குப்பம், கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த காலங்களில், புயல் கடந்து சென்று, ஒரு வாரம் கழித்து தான், பாதிப்பு பகுதிகளை, முதல்வர் ஆய்வு செய்வது வழக்கம்; சில முதல்வர்கள், ஹெலிகாப்டரில் வட்டமடித்து செல்வதும் நடந்துள்ளது.சமீபத்தில், 'நிவர்' புயல் கரை கடந்த, 24 மணி நேரத்திற்குள், முதல்வர் இ.பி.எஸ்., பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய புறப்பட்டார்; மேலும், வெள்ள நீரில் இறங்கி, பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். இது, வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.ஆனால் புயல் ஓய்ந்து, ஒரு வாரம் கழித்து தான், மத்திய குழுவினர் பாதிப்பு குறித்து பார்வையிட வந்தனர். இவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தான், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.அவர்கள் புதுச்சேரி மற்றும் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் பாதிப்பு குறித்து பார்வையிட்ட விதம், அதிர்ச்சியை அளித்துள்ளது.மத்திய குழுவினர், முதல் நாள் மாலை, புதுச்சேரிக்கு வந்தனர். மறுநாள் காலை, 9:00 மணிக்கு, அதிகாரிகளுடன் கூட்டம். அடுத்த, இரண்டு மணி நேரத்தில், நான்கு இடங்களில் பார்வையிட்டனர்.மதிய உணவுக்குப்பின் முதல்வர், கவர்னர் சந்திப்பு. மாலை, 3:00 மணிக்கு, கடலுார் புறப்பாடு. அங்கு இரண்டு மணி நேரமும்; விழுப்புரத்தில், இரண்டு மணி நேரமும் பார்வையிட்டனர். அதுவும், இரவு நேரத்தில், அவர்கள் ஆய்வு நடத்தியது எல்லாம் கொடுமை.இவர்கள், எப்படி கணக்கெடுத்திருப்பர்; விவசாயிகளிடம் குறையை கேட்டிருப்பரா என்பதை, சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இந்த கூத்தில், இவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தான், மத்திய அரசு நிவாரணம் வழங்குமாம்.இப்படி நுனிப்புல் மேய, எதற்காக மத்தியக் குழு வர வேண்டும். சொகுசு அறை, வாகனம், உணவு என, அவர்களுக்கு செய்தது எல்லாம், வீண் செலவு.அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கொடுக்கும் அறிக்கையை வாங்கிச் செல்ல, அவர்கள் ஏன் இங்கு வர வேண்டும்; 'இ - மெயில்' அனுப்ப சொல்லியிருக்கலாம்.
மத்திய குழு எடுத்த ஆய்வு, பாதிக்கப்பட்டோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
13-டிச-202012:28:38 IST Report Abuse
veeramani நெல்லிக்குப்பம் வாசகர் கருத்திற்கு மைய்ய அரசின் ஊழியர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பர். மேலும் மாநில அரசின் அதிகாரிகள் கொடுக்கும் நிதி கணக்கிலிருந்து தான் மைய்ய அரசு கணக்கீட்டின்படி புயல் நிவாரணம் அளிக்கும். ஆகவே, மய்ய அரசின் அதிகாரிகள் ஒருசில வேலைகளை கவனித்தால் போதுமானது.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
13-டிச-202009:50:06 IST Report Abuse
Darmavan MP MLA எல்லா சலுகையும் நிறுத்தப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
13-டிச-202009:49:05 IST Report Abuse
Darmavan கட்டுமரம் ராமானுஜர் டிவி தொடர் எடுத்து வியாபாரம்...ஹிந்தி எதிர்ப்பு ஒட்டு அரசியல்.. இரட்டை வேடம் போடும் பச்சோந்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X