கொரோனா தொற்று காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ள பத்திரிகை துறையை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகை திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என ஐ.என்.எஸ் தலைவர் ஆதிமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![]() கொரோனா தொற்று காரணமாக
பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகைதுறையை
ஊக்குவிக்கும் வகையில்
சிறப்பு சலுகைகளை அரசு அறிவிக்க
வேண்டும் என ஐ.என்.எஸ் தலைவர்
ஆதிமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
இது குறித்து இந்திய பத்திரிகைகள் சங்க பொதுச் செயலாளர் மேரி பால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
கொரோனா தொற்று காரணமாக எதிர்பாராத விதத்தில் பல்வேறு பாதிப்புகளை பத்திரிகை துறை எதிர்கொண்டுள்ளது. பொது முடக்கத்தால் விளம்பரங்கள் குறைந்தன. விநியோகமும் குறைந்தன. இதன் காரணமாக பத்திரிகை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.
இதன் காரணமாக பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் ஒரு சில பதிப்புகளை காலவரையின்றி நிறுத்தி கொண்டன. சில நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு விட்டது. கடந்த எட்டு மாதங்களில் சுமார் ரூ.12,500 கோடி இழப்பை சந்தித்து உள்ளன. நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தம் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்துறையில் ஈடுபட்டுள்ள 30 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மேலும், பத்திரிகைத் துறையைச் சார்ந்து இயங்கும் தொழிலகங்கள், அச்சகங்கள் உள்ளிட்டவையும் பாதிப்பை எதிர் கொள்கின்றன.
![]()
|
இக்கட்டான சூழ்நிலையிலும் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பத்திரிகை துறை மேற்கொண்டு வருகிறது. எனவே இத்துறைக்கான சிறப்புசலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். செய்திதாள் அச்சுகாகிதங்கள் மீது விதிக்கப்படும் 5 சதவீத சுங்க வரியை அரசு ரத்து செய்ய வேண்டும்.
பத்திரிகைத் துறைக்கு 2 ஆண்டுகளுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசின் விளம்பரங்களுக்கான கட்டணத்தை 50 சதவீதம் உயா்த்த வேண்டும்.பத்திரிகைத் துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டை 200 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அரசு விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கோரிக்கைகள் அனைத்தும் அவசரத் தேவையாக இருப்பதால், அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement