சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பெண் குழந்தைகளே என் வாழ்க்கை!

Added : டிச 12, 2020
Share
Advertisement
பெண் குழந்தைகளே என் வாழ்க்கை!ஆதரவற்ற ஏராளமான பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியும், வாழ்வாதாரமும் ஏற்படுத்தித் தருவது பற்றி, சென்னை, அடையாறு, அவ்வை இல்லத்தின் தலைவர் சுசீலா, ௮௩: அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவராக இருக்கும் டாக்டர் சாந்தா என் மூத்த சகோதரி. மருத்துவம் படிக்க எனக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், பி.ஏ., படித்ததும், தனியார் நிறுவனம் ஒன்றில், 30

சொல்கிறார்கள்

பெண் குழந்தைகளே என் வாழ்க்கை!

ஆதரவற்ற ஏராளமான பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியும், வாழ்வாதாரமும் ஏற்படுத்தித் தருவது பற்றி, சென்னை, அடையாறு, அவ்வை இல்லத்தின் தலைவர் சுசீலா, ௮௩: அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவராக இருக்கும் டாக்டர் சாந்தா என் மூத்த சகோதரி. மருத்துவம் படிக்க எனக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், பி.ஏ., படித்ததும், தனியார் நிறுவனம் ஒன்றில், 30 ஆண்டுகளாக பணியாற்றி, உயர் பதவியில் ஓய்வு பெற்றேன்.எனக்கென தனியாக குடும்பம் இல்லாததால், பணியில் இருக்கும் போதே, பல சேவைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். சென்னையில், ௧௯௩௧ல், அவ்வை இல்லத்தை ஏற்படுத்திய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மருமகள் மந்தா கிருஷ்ணமூர்த்திக்கு உடல்நலமில்லாததால், அவ்வை இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எனக்கு தந்தார்.பல்வேறு வழிகளில் நிதி திரட்டி, இந்த இல்லத்தை விரிவுபடுத்தி, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டி, சிறப்பாக நிர்வகித்து வருகிறேன்.இப்போது இங்கு, ஆதரவற்ற, ௧௮௫ பெண் குழந்தைகள் வளர்கின்றனர். அவர்களுடன் சேர்த்து, ௭௦௦ பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளியையும் நடத்தி வருகிறேன்.

ஒன்றாம் வகுப்பு முதல், மேல்நிலை கல்வி வரை இங்கு கற்பிக்கப்படுகிறது. இதற்காக, மிகக் குறைந்த சேவை கட்டணமே வசூலிக்கப்படுகிறது.படிப்பு தவிர, இசை, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள், தற்காப்பு உட்பட பல பயிற்சிகள், இங்குள்ள மாணவியருக்கு வழங்கப்படுகிறது. பள்ளி படிப்பை முடித்ததும், உயர் கல்வியில் மாணவியரை நாங்களே சேர்க்கிறோம். மேலும் வேலை வாய்ப்புக்கும் உதவி செய்கிறோம். திருமண வாழ்க்கையும் அமைத்து தருகிறோம். இங்குள்ள ஒவ்வொரு குழந்தையையும், என் சொந்தக் குழந்தை போலவே பாவிக்கிறேன். அவர்களின் அன்றாட வளர்ச்சியை பார்த்து பூரிப்பு அடைகிறேன். குழந்தைகளின் கல்வி, வளர்ச்சி, வேலை போன்ற விபரங்களை, தினமும், அக்கா சாந்தாவிடம் கூறி மகிழ்வது வழக்கம்.குடும்பச் சூழலால் பெண் குழந்தைகளை வளர்க்க முடியாதவர்கள், எங்களிடம் அழைத்து வந்து விடுங்கள். நாங்கள் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறோம். தரமான கல்வியை இலவசமாக தருவது
மட்டுமின்றி, வாழ்க்கையில் முன்னேற தேவையான அனைத்து உதவிகளை யும் செய்யத் தயாராக இருக்கிறேன்.என் எஞ்சிய வாழ்நாளையும், இங்கு வளரும் குழந்தைகளின் நலனுக்காகவே செலவிட விரும்புகிறேன். எனக்கென தனிப்பட்ட வாழ்க்கையை விரும்பவில்லை. அதனால், அவ்வை இல்லம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, அக்கா சாந்தா என, என் வாழ்க்கை சுழல்கிறது!


சொல்லித் தருவது தான் திருப்தி!



சிற்பி, நாடகக் கலைஞர், நாடக ஆசிரியர், முகமூடி தயாரிப்பாளர் என பல, 'வேஷங்களை' கட்டுவது பற்றி, புதுச்சேரியைச் சேர்ந்த, ஆழி வெங்கடேன்: என் தாத்தா, புதுச்சேரி பகுதியில் பிரபலமான தெருக்கூத்து வாத்தியார். என் அப்பாவும், தெருக்கூத்துகளில் நடித்தவர். தெருக்கூத்து வாத்தியாராக இருந்து, பல கலைஞர்களை உருவாக்கியவர். ஆனாலும், தெருக்கூத்து கலை தொழிலில் நான் இறங்கி விடக் கூடாது; நன்றாக படித்து, அரசு உத்யோகம் பார்க்க வேண்டும் என்பது தான் அவரின் விருப்பம். எனினும், தெருக்கூத்து கலை மீது எனக்கு, சிறு வயதிலேயே ஆர்வம் வந்து விட்டது. பள்ளியில் படிக்கும் போதே, தெருக்கூத்துகளில் நடிக்கத் துவங்கி விட்டேன்.என் ஆர்வத்தை பார்த்த அப்பா, முறையான பயிற்சி அளித்ததுடன், ஆக்கமும், ஊக்கமும் வழங்கினார்.
பள்ளிப் படிப்பை முடித்ததும், புதுச்சேரியிலேயே நுண்கலை பட்டப்படிப்பில், சிற்பக் கலை பயின்றேன். அதைத் தொடர்ந்து, இங்கு இயங்கி வந்த நாடகக் குழுக்களுடன் அறிமுகம் ஏற்பட்டது; நாடகங்களில் நடித்தேன். வாழ்க்கை நடத்த இவை மட்டும் போதாது என நினைத்து, போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி படித்தேன். அந்த நேரத்தில், டில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில், ௪௦ நாட்கள் மேடை பயிற்சி பெற்றேன். மேலும், கேரளாவிலும், ௪௦ நாட்கள் கிராமியக் கலை பயிற்சியையும் மேற்கொண்டேன்.இப்படி என் கலைத்தாகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருந்தது. அப்போது பார்த்து, நடிகர் நாசர், தேவதை என்ற படத்தை எடுத்தார். அதில் கலை இயக்குனராக பணியாற்றினேன். படத்தின் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு தேவையான கலைப்பொருட்களை செய்து கொடுத்து, அவரின் பாராட்டுதல்களைப் பெற்றேன்.அந்தப் படத்தில் பணியாற்றிய போது தான், என் பெயரை, ஆழி வெங்கடேசன் என, 'டைட்டில் கார்டு' போடச் செய்தார், நாசர். எனினும், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால், வாழ்வாதாரத்திற்காக, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் முகமூடிகளைச் செய்து தரத் துவங்கினேன். குறிப்பாக, பள்ளிக்கூட மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும், பல வண்ணங்களால் ஆன முகமூடியை தயாரித்தேன்.அது மட்டுமின்றி, பள்ளிகளுக்குச் சென்று, முகமூடி தயாரிப்பது எப்படி என, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தேன். மேலும், இந்த கொரோனா நேரத்தில், 'ஆன்லைன்' வாயிலாக, முகமூடி தயாரிப்பது எப்படி என வகுப்புகள் எடுத்து வருகிறேன். பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் தான், மன நிறைவும், திருப்தியும் ஏற்படுகிறது!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X