டிச., 13, 1987
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள, நதிக்குடி கிராமத்தில், 1932 டிச., 18ல் பிறந்தவர், நா.பார்த்தசாரதி. மதுரை தமிழ்ச் சங்கத்தில், பண்டிதர் பட்டம் பெற்றார். மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, விமர்சனம் என, எழுத்தின் பல்வேறு துறைகளில் இயங்கி வந்தார். 'தீரன், பொன்முடி, கடலழகன், இளம்பூரணன்' உட்பட, பல்வேறு புனைப் பெயர்களில் எழுதி வந்தார். மொத்தம், 93 நுால்கள் எழுதியுள்ளார்.சாகித்ய அகாடமியின் உறுப்பினராக பணியாற்றினார். 'தீபம்' என்ற இலக்கிய மாத இதழை துவக்கினார். பல்வேறு இதழ்களில், ஆசிரியராகப் பணிபுரிந்தார்.சாகித்ய அகாடமி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 45 வயதுக்குப் பின், பச்சையப்பன் கல்லுாரியில், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1987 டிச., 13ம் தேதி, தன் 55-வது வயதில் இயற்கை எய்தினார்.எழுத்தாளர் நா.பார்த்தசாரதி காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE