மும்பை:மஹாராஷ்டிராவில், பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கான உடைகளில், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள அரசு ஊழியர்கள், அலுவலகங்களுக்கு நாகரிகமாக ஆடை அணிந்து வர வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை, மாநில அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை:
கைத்தறி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அரசு ஊழியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும்.முறையாகவும், துாய்மையாகவும் உடைகளை அணியாத அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணிகள் மீது, எதிர்மறை கருத்து உருவாகிறது.
எனவே, அனைவரும் சுத்தமான, நாகரிகமான உடைகளை அணிந்து பணிக்கு வர வேண்டும். 'ஜீன்ஸ், டி - ஷர்ட்' அணிந்து, பணிக்கு வர தடை விதிக்கப்படுகிறது.பெண்கள் புடவை, சுடிதார், சல்வார், குர்தாஸ், பேன்ட் அணிந்து பணிக்கு வரலாம். தேவைப்பட்டால் துப்பட்டா அணியலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE