புதுடில்லி:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 98.27 லட்சமாக உயர்ந்துள்ளது; இவர்களில், 95 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 10 லட்சத்து, 65 ஆயிரத்து, 176 பேரிடம், கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.இதன் முடிவில், 30 ஆயிரத்து, 6 பேரிடம் பாதிப்பு உறுதியானது. இவர்களுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 98 லட்சத்து, 26 ஆயிரத்து, 775 ஆக அதிகரித்துஉள்ளது.
இவர்களில், 3.60 லட்சம் பேர், சிகிச்சையில் உள்ளனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில், 3.66 சதவீதம்.கொரோனா தொற்றில் இருந்து, 93 லட்சத்து, 24 ஆயிரத்து, 328 பேர் குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 94.88 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த, 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில், 87 பேர், டில்லியில், 60; மேற்கு வங்கத்தில், 50; கேரளா மற்றும் பஞ்சாபில் தலா, 29 பேர் உட்பட, 442 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.
இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து, 42 ஆயிரத்து, 628 ஆக அதிகரித்துள்ளது; இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக இருக்கிறது.பலி எண்ணிக்கையில், 48 ஆயிரத்து, 59 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தில் தொடர்கிறது. கர்நாடகா, 11 ஆயிரத்து, 928 பேருடன், இரண்டாம் இடத்திலும், 11 ஆயிரத்து, 870 பேருடன், தமிழகம் அடுத்த இடத்திலும் உள்ளன.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE