புதுடில்லி:'குடும்பக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும்படி, மக்களை கட்டாயப்படுத்த முடியாது' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர், அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்;
மனுவில் அவர் கூறியுள்ளதாவது:நாட்டில், 20 சதவீதம் பேருக்கு, ஆதார் அட்டை இல்லை. மக்கள் தொகைமேலும், ரோஹிங்யா முஸ்லிம்கள், வங்கதேச அகதிகளின் எண்ணிக்கை கோடிக் கணக்கில் இருக்கும். அதன்படி பார்த்தால், மக்கள் தொகையில், சீனாவை முந்தி, இந்தியா முதலிடத்தை எட்டியிருக்கும்.மக்கள்தொகை பெருக்கமே, பல பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. அனைவருக்கும் தரமான குடிநீர், காற்று, மருத்துவம் போன்றவை கிடைக்காததற்கு இதுவே காரணம்.அதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும்.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதை தடை செய்ய வேண்டும் என, வழக்கு தொடர்ந்தேன். அதை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதிக குழந்தைகள் பெறுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், மத்திய அரசின் சார்பில், சுகாதார அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, 2000ம் ஆண்டில், தேசிய மக்கள்தொகை கொள்கை உருவாக்கப்பட்டது. மேலும், 2017ல் தேசிய சுகாதார கொள்கை உருவாக்கப்பட்டது.தேசிய சுகாதார கொள்கையின்படி, 2025ம் ஆண்டுக்குள், சராசரியாக ஒரு தம்பதி, குழந்தை பெற்றெடுக்கும் விகிதத்தை, 2.1 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 1994ல், மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆலோசனைஅதில், இந்தியாவும் இணைந்துள்ளது. குழந்தைப் பெற்றெடுக்கும் விகிதம், 3.2 சதவீதத்தில் இருந்து, தற்போது, 2.2 சதவீதமாக குறைந்துள்ளது. அதனால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், சுகாதாரம் என்பது, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில், ஆலோசனைகளை மட்டுமே மத்திய அரசால் வழங்க முடியும். இத்தனை குழந்தைகள்தான் பெற்று கொள்ள வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த விரும்பவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE