அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ.,மீது பொய் குற்றச்சாட்டு: ஆ.ராஜா மீது போலீஸ் வழக்கு

Updated : டிச 14, 2020 | Added : டிச 12, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
சென்னை:மறைந்த ஜெயலலிதா மீது, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஆதாயம் தேட முயற்சி செய்ததாக, தி.மு.க., --- எம்.பி., - ஆ.ராஜா மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார், இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னையில் வசிப்பவர் திருமாறன். அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணை செயலரான இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சந்தித்து வரும், தி.மு.க., - -
ஜெ.,பொய் குற்றச்சாட்டு, ஆ.ராஜா , வழக்குப்பதிவு

சென்னை:மறைந்த ஜெயலலிதா மீது, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஆதாயம் தேட முயற்சி செய்ததாக, தி.மு.க., --- எம்.பி., - ஆ.ராஜா மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார், இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் வசிப்பவர் திருமாறன். அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணை செயலரான இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சந்தித்து வரும், தி.மு.க., - - எம்.பி. - ஆ.ராஜா சென்னையில், டிச., 5ல், பேட்டி அளித்தார். அப்போது, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக, மறைந்த ஜெ., - தற்போதைய முதல்வர் இ.பி.எஸ்., மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.பேட்டி என்ற போர்வையில், தரம் தாழ்ந்து தனி நபர் ஒழுக்கமின்றி, பெண்மையை இழிவுபடுத்தி பேசியுள்ளார். ஜெ., - இ.பி.எஸ்., ஆகியோரை ஒருமையில் பேசியுள்ளார்.

மேலும், இவர்கள் குறித்து உண்மைக்கு மாறாக, பொதுமக்களிடம் அவதுாறு பரப்பும் வகையில், ராஜா பேசியிருப்பது வெறுக்கத்தக்க பேச்சு என்ற அடிப்படையில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உகந்ததாகும். அத்துடன், டிச., 6ல், முதல்வர் குறித்து ஒருமையில் பேசியதுடன், பொய்யான தகவல்களை கூறியுள்ளார். ராஜா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது. இப்புகார் விசாரணைக்காக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, பரிந்துரை செய்யப்பட்டது.

புகார் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஆ.ராஜா மீது, வேண்டுமென்றே ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி, ஆதாயம் தேடுதல்; குறிப்பிட்ட அமைப்பையோ அல்லது மக்களையோ குற்றச்செயலில் ஈடுபட துாண்டுதல் என, இரண்டு பிரிவுகளில், நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
15-டிச-202013:27:56 IST Report Abuse
தல புராணம் ஏ-.1... சபாஷ்.. ஏ-.1...
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
13-டிச-202022:04:00 IST Report Abuse
bigu பல லட்சம் கோடி அரசு சொத்தை கொள்ளை அடிச்ச ஜேஜே என்று பலமுறை நீதி அரசர்கள் சுட்டிக்காட்டியதை தான் ராஜா சொன்னார்,இதை ஏன் திருப்பி ஆளும்கட்சி பெருசு படுத்தி மக்களுக்கு நினைவுட்டுகிறது
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-டிச-202018:53:51 IST Report Abuse
Endrum Indian அப்படி என்ன தான்யா சொன்னாரு இந்த ராசா கொஞ்சம் விளக்கமாக வந்தால் அது தவறா இல்லையா என்று மக்கள் எல்லோருக்கும் தெரியுமில்லே அதை ஏன் இது வரை வெளியிடவில்லை எந்த மீடியாவும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X