விருத்தாசலம்: சனி பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை 10:30 மணியளவில், நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல், சந்தனக்காப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE