விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நடந்த 602 வழக்குகளுக்கு,ரூ. 2 கோடியே 28 லட்சத்து 65 ஆயிரத்து 55 அளவில் தீர்வு காணப்பட்டது.விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன் தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா முன்னிலை வகித்தார்.கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, நீதிபதிகள் மணிமேகலை, மனோகரன், மாஜிஸ்திரேட்டுகள் ஆனந்த், வெங்கடேஷ்குமார் வழக்குகளை விசாரித்தனர்.மோட்டார் வாகன விபத்துகள், சிவில், விவாகரத்து, பாகப்பிரிவினை, செக் மோசடி மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள 571 அபராத வழக்குகள் உட்பட 602 வழக்குகளை விசாரித்து,ரூ. 2 கோடியே 28 லட்சத்து 65 ஆயிரத்து 55 அளவில் தீர்வு காணப்பட்டது.அரசு வழக்கறிஞர் விஜயகுமார், வழக்கறிஞர் காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, வட்ட சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் அஸ்வதராமன் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE