இலங்கை சிறையில் கலவரம் நடந்தது ஏன்?

Added : டிச 12, 2020
Share
Advertisement
கொழும்பு:இலங்கை சிறையில் 'கொரோனா பரவல் அச்சத்தால், கைதிகளுக்கிடையே கலவரம் ஏற்பட்டது' என, விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கையின் மஹாராவில் உள்ள சிறையில், கடந்த மாதம் கைதிகளுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. அப்போது, போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில், 11 கைதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஐந்து பேர்

கொழும்பு:இலங்கை சிறையில் 'கொரோனா பரவல் அச்சத்தால், கைதிகளுக்கிடையே கலவரம் ஏற்பட்டது' என, விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நம் அண்டை நாடான இலங்கையின் மஹாராவில் உள்ள சிறையில், கடந்த மாதம் கைதிகளுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. அப்போது, போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில், 11 கைதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அவர்கள் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கை:கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகளும், சிறையில் உள்ளனர். அவர்களால், தங்களுக்கும் வைரஸ் பரவலாம் என, அச்சமடைந்த கைதிகள், இந்த பிரச்னைக்கு முடிவு காணும்படி கோரியுள்ளனர். இந்த கோரிக்கைக்கான கைதிகளின் போராட்டம், கலவரமாக மாறியுள்ளது. தங்களிடம் இருந்து கத்தி, வாள் போன்ற ஆயுதங்களால், ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். ஆனால் அவர்களிடம் துப்பாக்கிகள் இல்லை. கலவரம் தீவிரம் அடைந்ததால், அதை கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X