விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் குழப்பங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்' என தி.மு.க., எம்.எல்.ஏ., பொன்முடி தெரிவித்தார்.விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள எம்.ஆர்.ஐ.சி., ஆர்.சி., பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடந்தது. முகாமை தி.மு.க., மாநில துணை பொதுச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.அப்போது அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ததில், பல மையங்களில் இரு இடங்களில் வாக்காளர்கள் பெயர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதை நீக்கினார்களா என தெரியவில்லை.மரகதபுரத்தில் ஒருவருக்கு 9 இடங்களில் ஓட்டுகள் உள்ளது. விழுப்புரம் தொகுதியில் 89 பூத்களில், ஒரே பெயர் இருமுறை வருகிறது. வாக்காளர் தயாரிப்பு பட்டியலில், மத்திய மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதி முடிவுகள் வந்தவுடன், கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். அப்படியும் திருத்தவில்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை' என்றார்.மாவட்டச் செயலாளர் புகழேந்தி, மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் டாக்டர் லட்சுமணன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் புஷ்பராஜ், நகர பொறுப்பாளர் சக்கரை உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE