பொது செய்தி

தமிழ்நாடு

காவலர் எழுத்துத் தேர்வு இன்று நடக்கிறது: மையங்களில் எஸ்.பி., ஆய்வு

Added : டிச 12, 2020
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுவதையொட்டி, தேர்வு மையங்களை எஸ்.பி., ஆய்வு செய்தார்.தமிழ்நாடு காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று 13ம் தேதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுவதையொட்டி, தேர்வு மையங்களை எஸ்.பி., ஆய்வு செய்தார்.தமிழ்நாடு காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று 13ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில், 19 ஆயிரத்து 884 ஆண்களும், 4,281 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 24 ஆயிரத்து 166 பேர் 14 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர்.இதையடுத்து, நேற்று விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, டாக்டர் எம்.ஜி.ஆர்., மகளிர் கல்லுாரி உள்ளிட்ட மையங்களில் தேர்வர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில், 'தேர்வு மையங்களில், 2,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்வர்கள் காலை 8:00 மணி முதல் அனுமதிக்கப்படுவர்.பால்பாயிண்ட் பேனா, தேர்வெழுதும் அட்டையோடு, ஹால்டிக்கெட் கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் முழுவதுமாக பரிசோதித்த பின், மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மொபைல் கொண்டு வந்தால் அனுமதி கிடையாது. தேர்வு அறைகள் வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X