திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 366 ஏரிகள், நுாறு சதவீதம் நிரம்பி உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக, தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில், 576 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 654 சிறு அளவிலான ஏரிகளும் உள்ளன.மேலும், 3,227 குளம், குட்டைகள் உள்ளன. இவற்றில், ஆரணி ஆறு வடிநில கோட்டத்தில், 218 ஏரிகள் நுாறு சதவீதம் நிரம்பி உள்ளன. 50 - 90 சதவீதம் வரை, 32 ஏரிகள் நிரம்பி உள்ளன.கொற்றலை ஆறு நீர்பாசன பகுதியில், 151 ஏரிகள் நுாறு சதவீதம் நிரம்பி உள்ளன. 50 - 90 சதவீதம் வரை, 173 ஏரிகளும், 25 சதவீதத்திற்குள், 22 ஏரிகளும் நிரம்பி உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE