கஞ்சா கடத்திய வாகனம் பறிமுதல்கனகம்மாசத்திரம்: ஆந்திர மாநிலம், ஓஜிகுப்பம் பகுதியில் இருந்து, வாகனங்கள் மூலம், கனகம்மாசத்திரம் வழியாக, திருவள்ளூர் மாவட்டத்திற்கு, கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார் நேற்று. பூனிமாங்காடு பஸ் நிறுத்தம் அருகே. வாகன சோதனை நடத்தினர்.அப்போது. இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களை போலீசார் மடக்கிய போது, இரண்டு பேரும், வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். போலீசார் இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது, 20 கிராம் எடை கொண்ட, 20 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்கள் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.கடைக்கு சென்ற சிறுமி மாயம்திருத்தணி: திருத்தணி, மேட்டுத் தெருவைச் சேர்ந்த, 17 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் இரவு, தன் பெற்றோரிடம் பஜாரில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராததால், அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.18 டன் அரிசி பறிமுதல்நகரி: சித்துார் மாவட்டம், ஏர்பேடு அடுத்த, அமந்துார் கிராமத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக, திருப்பதி விஜிலென்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, பறக்கும் படை போலீசார் நேற்று, மேற்கண்ட கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மோகன், 45, என்பவரது வீட்டில், 18 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மோகனை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை, ஏர்பேடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.49 செம்மரம் பறிமுதல்நகரி: சித்துார் மாவட்டம், பாகரபேட்டை, சேஷாசலம் காட்டில், தமிழகத்தைச் சேர்ந்த, 50 கூலித் தொழிலாளர்கள் புகுந்து செம்மரக்கட்டைகளை வெட்டிக் கொண்டிருந்தனர்.அதிரடி படை போலீசார் மேற்கண்ட காட்டுப் பகுதிக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும், 50 தொழிலாளர்களும் தப்பி ஓடினர். அங்கு வெட்டிய, 49 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போன்று, சந்திரகிரி வனத் துறையினர் நடத்திய சோதனையில், ஐந்து செம்மரக்கட்டைகள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.அரிசி கடையில் திருட்டுகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 40. சர்வ தீர்த்த குளம் அருகில், அரிசி கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி, வீட்டுக்குச் சென்றார். நேற்று காலை, கடையை திறக்க சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் வைத்திருந்த, 12 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது தெரிய வந்தது. அதேபோல், ஒலிமுகமதுபேட்டை பகுதியில், ஒரு அரிசி கடையிலும்,திருட்டு முயற்சி நடந்துள்ளது. இது குறித்து, ஆனந்தன் புகாரை, சிவகாஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE