பரமக்குடி : பரமக்குடி சந்தை திடலில் அமைக்கப்பட்ட மாவட்ட மினி விளையாட்டு அரங்கம் கழிவுநீர் தேங்கி வீணாகி வருகிறது.
விளையாட்டு வீரர்கள் கவலையில் உள்ளனர்.பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட சந்தை திடலில் 7 வருடத்திற்கு முன்பு மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. அப்போது விளையாட்டு வீரர்கள் தங்கும் அறை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.இத்துடன் ஓடுதளம், நீளம், உயரம் தாண்டும் வசதிகள், ஹாக்கி, கால்பந்து அரங்கம் என பல்வேறு விளையாட்டு நடத்துவதற்கு ஏதுவாக களம் அமைக்கப்பட்டது.தொடர்ந்து விடுமுறை நாட்களில் உண்டு, உறைவிட வசதிகளுடன் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆனால் அனைத்தும் சுமார் 3 வருடங்கள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், விளையாட்டரங்கம் கவனிப்பாரற்று கழிப்பறை, வீரர்கள் தங்கும் இடம் என வீணாகி உள்ளது.இத்துடன் சுற்றுச்சுவர் உடைந்தும், கேட் காணாமல் போய்விட்டது. முக்கியமாக ஓடு தளங்கள் முழுவதும் மழைநீர் தேங்கி, கழிவு நீரால் நிரம்பி கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் எந்த விதமான விளையாட்டு போட்டிகளும் நடத்த முடியாத வகையில் விளையாட்டரங்கம் வீணாகி உள்ளதால் வீரர்கள் கவலையடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE