வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 41 துணை சுகாதார நிலையங்களில், 'மினி கிளினிக்' திட்டம் துவக்கப்பட்ட உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஒன்றியங்களில், 28 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 166 துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், பெரும்பாலான சுகாதார நிலைய கட்டடங்கள், பயன்பாடு இன்றி மூடிக் கிடக்கின்றன.பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு, புத்துயிர் அளிக்கும் விதமாக, கிராமங்களில், 'மினி கிளினிக்' திட்டத்தை, அரசு துவக்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 41 துணை சுகாதார நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.முதற்கட்டமாக, காஞ்சி புரம் ஒன்றியத்தில், ஓரிக்கை; வாலாஜாபாத் ஒன்றியத்தில், கோவிந்தவாடி; ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், மாத்துார் மற்றும் போந்துார்.குன்றத்துார் ஒன்றியத்தில், நாவலுார்; உத்திரமேரூர் ஒன்றியத்தில் திருப்புலிவனம் மற்றும் கம்மாளம்பூண்டி என, ஏழு இடங்களில், வரும், 17ம் தேதிக்குள், சேவை துவக்கப்பட உள்ளது.காஞ்சிபுரம் துணை சுகாதார நலப்பணிகள் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மக்கள் தொகை அதிகமாக இருக்கும் கிராமங்களில், 'மினி கிளினிக்' துவக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மினி கிளினிக்கிலும், காலை மற்றும் மாலை என, இரு வேளைகளிலும், அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர்.உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை உட்பட, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கும் அனைத்து சிகிச்சைகளும் பார்க்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE