பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணங்கள் காற்றில் பறக்கும் உத்தரவு

Added : டிச 12, 2020
Share
Advertisement
சென்னை:ரேஷன் ஊழியர்கள், தங்களை பாதுகாத்து கொள்ள, பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு, உணவு வழங்கல் துறை விடுக்கும் உத்தரவை, நுகர்பொருள் வாணிப கழகமும், கூட்டுறவு துறையும் பின்பற்றாமல் உள்ளன.முக கவசம்தமிழகத்தில் உள்ள, 35 ஆயிரம் ரேஷன் கடைகளில், 33 ஆயிரத்தை, கூட்டுறவு துறையும்; மற்ற கடைகளை, நுகர்பொருள் வாணிபக் கழகமும் நடத்துகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து

சென்னை:ரேஷன் ஊழியர்கள், தங்களை பாதுகாத்து கொள்ள, பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு, உணவு வழங்கல் துறை விடுக்கும் உத்தரவை, நுகர்பொருள் வாணிப கழகமும், கூட்டுறவு துறையும் பின்பற்றாமல் உள்ளன.


முக கவசம்

தமிழகத்தில் உள்ள, 35 ஆயிரம் ரேஷன் கடைகளில், 33 ஆயிரத்தை, கூட்டுறவு துறையும்; மற்ற கடைகளை, நுகர்பொருள் வாணிபக் கழகமும் நடத்துகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்து கொள்ள, முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால், ரேஷன் கடை ஊழியர்கள், வைரஸ் தொற்று பரவலில் இருந்து, தங்களை பாதுகாத்து கொள்ள, உரிய எண்ணிக்கையில் முக கவசம், கையுறை, 'சானிடைசர்' வழங்குமாறு, கூட்டுறவு துறைக்கும், வாணிப கழகத்திற்கும், உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், அவை, ஊழியர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை.இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:சாக்கு பைகளாலும், அரிசி, கோதுமையில் இருந்து வரும் துாசியாலும், மூச்சு திணறல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. வைரஸ் தொற்றாலும், ஊழியர்கள் பாதிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தொடர்பாக, மாதம்தோறும், உணவு வழங்கல் துறை விடுக்கும் சுற்றறிக்கையில், ஊழியர்களுக்கு உரிய எண்ணிக்கையில், பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு உத்தரவிடப்படுகிறது.


பாதுகாப்பு

மே, ஜூன் மாதங்களில், முக கவசம், கிருமி நாசினி வழங்கியதோடு சரி. அதன்பின், அவை, வழங்கப்படவில்லை. ஆனால், பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக வழங்கப்படுவதாக, உயரதிகாரிகளுக்கு அறிக்கை மட்டும் அளிக்கப்படுகிறது. எனவே, மாதம், இரண்டு முக கவசம், கையுறை, ஒரு சானிடைசர் பாட்டில் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X