காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், பிச்சையெடுக்க பயன்படுத்திய குழந்தைகளை, குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் மீட்டு, போலீசில் ஒப்படைத்தனர்.காஞ்சிபுரத்தில், பஸ் நிலையம், கங்கைகொண்டான் மண்டபம், காந்தி சாலை, காமராஜர் சாலை என, முக்கிய பகுதிகளில், சில பெற்றோர், கைக்குழந்தைகளுடன், வாகனங்களில் செல்வோரிடம் பிச்சை எடுத்து வந்தனர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளையும், பிச்சையெடுக்க ஈடுபடுத்தினர்.இது குறித்து, தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நல காப்பாளர்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து, அவர்களை பிடித்தனர்.அவர்களிடமிருந்து, ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட, 18 பேரை, போலீசார் மீட்டனர்.மேலும், மாவட்ட குழந்தைகள் நல உறுப்பினர் சக்திவேல், பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு, ஆலோசனை வழங்கினார். மேலும், இதுபோன்ற தொழிலில் ஈடுபடக்கூடாது என, பெற்றோரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிய பின் விடுவிக்கப்பட்டனர்.இத்தொழிலில் ஈடுபட்டோர் அனைவரும், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என, விசாரணையில் தெரியவந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE