ஆர்.ஏ.புரம்: 'ராப்ரா' குடியிருப்போர் சங்கம், தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து, மாடித் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு, முகாமை நடத்துகிறது.சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கமான, ராப்ரா, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து, தோட்டக்கலை குறித்த விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சியை, இன்று நடத்துகிறது.இது குறித்து, 'ராப்ரா' தலைவரும் மருத்துவருமான சந்திரசேகரன் கூறியதாவது:ஆர்.ஏ.புரம், ஏழாவது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா எதிரில் காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, முகாம் நடைபெறும்.இதில் வீட்டு தோட்டம், மாடித் தோட்டம் அமைப்பது குறித்து, குடியிருப்போரின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.மேலும் இந்த முகாமில், தோட்டம் அமைக்க தேவையான அனைத்து பொருட்கள் அடங்கிய தோட்டக்கலைத்துறையின் பிரத்யேகமான முடிச்சு பை மற்றும் செடிகள், விதைகள், உரம் உள்ளிட்டவை, குறைந்த விலையில் விற்க உள்ளனர்.முடிச்சு பை வாங்க விரும்புவோர், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் போட்டோவை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 97908 99758 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE