சென்னை:ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, செம்பாக்கம்பகுதி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக, அப்பகுதியில், பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தினர், ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்துள்ளனர்.
ரஜினியின், 71வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்தாண்டு வெறும் கொண்டாட்டத்தோடு மட்டுமில்லாமல், ரஜினியின் அரசியல் பிரவேசமும் சேர்ந்துள்ளதால், அவரது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் அதிகரித்துள்ளது.'தன் பிறந்த நாளை மக்களுக்கான கொண்டாட்டமாக, நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும்' என, ரஜினி கூறியிருந்தார்.
அதை ஏற்று, அரபு நாடான பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தினர், பழங்குடியின ஊர் மக்களுக்கு வாழ்வாதார அடிப்படை பிரச்னையை தீர்த்து வைத்துள்ளனர்.
இது குறித்து, பஹ்ரைன்ரஜினி மக்கள் மன்ற செயலர், சுரேஷ் காலடி கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கம் பகுதியில், 55 பழங்குடியின குடும்பத்தினர், வாழ்வா தாரம் பாதித்து, குடிநீர், மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். அப்பகுதியில், ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என, சமூக அர்வலர் ஷகீரா பானு, எங்களிடம் கோரிக்கை அளித்திருந்தார்.
தலைவரின் பிறந்தநாளை சிறப்பாக்கும் விதமாக, அப்பகுதியினருக்கு, 1 லட்சம் ரூபாய் செலவில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவினர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE