திருவாடானை : தொண்டி கடலில் குளிக்கக்கூடாது என கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் கடற்கரைகளில் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டன.
தொண்டி மரைன் போலீசார் கூறியதாவது:தொண்டி, தீர்த்தாண்டதானம் போன்ற கடலில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் எஸ்.பி.பட்டினம், புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது.அசம்பாவிதமான சம்பவங்கள் ஏற்பட்டால் அவசர உதவிக்கு 1093 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE