சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளத்தில் வீசப்பட்ட ரவுடி சடலம் கொலை செய்த நண்பர்களுக்கு வலை

Added : டிச 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அம்பத்துார்: அம்பத்துாரில், மது விருந்தில் ஏற்பட்ட மோதலில், நண்பர்களால் ரவுடி ஒருவர் வெட்டி கொல்லப்பட்டார். கை, கால்கள் கட்டி, குளத்தில் வீசப்பட்ட சடலத்தை போலீசார் மீட்டனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.தலைமறைவுஅம்பத்துார் மங்களாபுரம், குள்ளன் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 30. இவரை, கடந்த, 10ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து, அவரது தாய் கலைசெல்வி,

அம்பத்துார்: அம்பத்துாரில், மது விருந்தில் ஏற்பட்ட மோதலில், நண்பர்களால் ரவுடி ஒருவர் வெட்டி கொல்லப்பட்டார். கை, கால்கள் கட்டி, குளத்தில் வீசப்பட்ட சடலத்தை போலீசார் மீட்டனர்.

இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.தலைமறைவுஅம்பத்துார் மங்களாபுரம், குள்ளன் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 30. இவரை, கடந்த, 10ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து, அவரது தாய் கலைசெல்வி, நேற்று முன்தினம், அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில், அம்பத்துார், அரசு தொழிற்பயிற்சி மையத்தின் பின்புறம் உள்ள குளக்கரையில், அவர், மேலும் சில நண்பர்களுடன், மது விருந்தில் பங்கேற்றது தெரியவந்தது.இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்தபோது, ஆங்காங்கே ரத்த கறைகள் காணப்பட்டன. சதீஷுடன் மது விருந்தில் பங்கேற்ற, அவரது நண்பர்களும் தலைமறைவாகி இருந்தனர்.

இதனால், மது போதையில் ஏற்பட்ட மோதலில், சதீஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகித்தனர்.அம்பத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன், குளம் மற்றும் அங்குள்ள முட்புதர்களில், நேற்று முன்தினம் இரவு வரை, சதீஷின் உடலை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.மீட்புமீண்டும், நேற்று காலை, 8:00 மணி முதல், தேடுதல் பணி தொடர்ந்தது. அப்போது, 9:30 மணி அளவில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன், சதீஷின், சடலம் மீட்கப்பட்டது.உடற்கூறு ஆய்வுக்காக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சதீஷ் தொழில் போட்டியால் கொல்லப்பட்டாரா அல்லது வேறு விவகாரமா என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.மேலும், அவரை கொலை செய்தவர்களை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி சதீஷ் மீது, அம்பத்துார், கொரட்டூர் காவல் நிலையங்களில், 10க்கும் மேற்பட்ட, கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
13-டிச-202010:21:37 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj பத்தடுக்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் அவர் மீது இருந்தும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்திருப்பின் அவன் மனம் திருந்தி வாழ்வு வகுத்திருப்பான் ஆனால் இப்படி ஒரு முடிவு எதைக்காட்டுகிறது பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தாலே சாவான் என்றே ஆனால் அவனது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தார் இழப்புக்கு உள்ளாகாமல் இருந்திருக்க உரிய அதிகாரிகள் முதலிலே நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் ரவுடி எனும் பட்டம் அளித்திருந்தும் விட்டு விடுவதால் தான் கூட்டாளிகளே குழி தோண்டும்படி ஆகிவிட்ட்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X