'டிஜிட்டல்' கார்டு வழங்க தேர்தல் கமிஷன் திட்டம்

Updated : டிச 14, 2020 | Added : டிச 12, 2020 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: 'டிஜிட்டல்' முறையில், வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய, தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, வாக்காளர்கள் ஓட்டு போடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அடையாள அட்டையை வைத்து ஓட்டு போடும் முறை, 1993ல், அப்போதைய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த,
டிஜிட்டல் கார்டு,  தேர்தல் கமிஷன், திட்டம்

புதுடில்லி: 'டிஜிட்டல்' முறையில், வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய, தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, வாக்காளர்கள் ஓட்டு போடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
அடையாள அட்டையை வைத்து ஓட்டு போடும் முறை, 1993ல், அப்போதைய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த, டி.என்.சேஷனால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த முறையை மாற்றி, டிஜிட்டல் முறையில், வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய, தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்தலில் ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு, டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. எனினும், இந்த விஷயத்தில் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.களத்தில் உள்ள அதிகாரிகள், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து, பல பரிந்துரைகள் வந்துள்ளன. அதில், இந்த டிஜிட்டல் அடையாள அட்டையும் ஒன்று.அடையாள அட்டையை அச்சிட்டு, அதை வாக்காளர்களிடம் சேர்ப்பதற்கு, அதிக கால நேரம் ஆகிறது. இந்த டிஜிட்டல் அடையாள அட்டை, வாக்காளர்களுக்கு உடனடி யாக கிடைத்துவிடும்.


மேலும், டிஜிட்டல் அடையாள அட்டையில், வாக்காளரின் புகைப்படம் மிகவும் தெளிவாக இருக்கும்.டிஜிட்டல் அடையாள அட்டை, மொபைல் போன், இணையதளம், மின்னஞ்சல் என, எதில் வேண்டுமானாலும் அறிமுகம் செய்யப்படலாம். தேர்தல் ஆணையம், இதில் இறுதி முடிவு எடுத்த பின், இது குறித்த தெளிவான விபரங்கள் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
13-டிச-202016:46:59 IST Report Abuse
Sathiamoorthy.V இது ஒரு சூது. மாபியா பத்திர பதிவுகள், ஆதார் கார்டு, பான் கார்டு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை அனைத்திலும் தனி தனி குழுக்கள் கூட்டு போட்டு தப்பு தப்பாக பதிவு செய்து கொள்ளை அடிக்கும் வழி. இவை அனைத்திற்கும் ஆதார் ஒன்றே போதும். எந்த கட்சி வந்தாலும் மாறாது.
Rate this:
A P - chennai,இந்தியா
13-டிச-202020:24:13 IST Report Abuse
A Pஆதார் கார்டு ஒன்றே ஓட்டளிக்கப் போதுமானது. யாராவது பாராளுமன்றத்தில் நன்றாக இதனை எடுத்துச் சொல்லலாம். சில கட்சிப் ப்ராணிகளுக்குப் பாராளுமன்றத்தில் சும்மா கூச்சல் போடத்தான் தெரிகிறது. உபயோகமற்றவர்கள்....
Rate this:
visu - Pondicherry,இந்தியா
13-டிச-202021:29:22 IST Report Abuse
visuஆதார் கார்டில் டிரைவிங் லைசென்ஸ் இணைக்கலாம் voter id. சற்று சிரமம் தொகுதி பிரச்சினை வருவதால்...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-டிச-202012:49:55 IST Report Abuse
Malick Raja செலவினங்கள் .. வரவில்லாமல் கூடுவது பொருளாதார நிலையை முற்றிலும் பாதிக்கும் ..
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
13-டிச-202010:18:39 IST Report Abuse
Kundalakesi Aadhar must be linked and OTP should be used while doing any changes or Voting
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X